vikram
vikram

கடந்த 2022 ஆம் ஆண்டு ஓடிடி ரிலீஸாக வெளியான திரைப்படம் மாகான். விக்ரம் நடிப்பில் இந்தப் படம் நேரடியாக அமேசானில் ஒளிபரப்பானது. தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம், என எல்லா மொழிகளிலும் படம் ரிலீஸானது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். படத்தில் விக்ரமின் மகனான துருவ் விக்ரமும் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருப்பார்.

ஒரு கட்டத்தில் விக்ரமுக்கும் துருவ் விக்ரமுக்கும் நடக்கும் அந்த போர் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. காந்தியவாதியாக இருக்கும் சூழ்நிலையில் விக்ரம் தள்ளப்படுவார். அவர் சண்டை போடுவது, கோபப்படுபவது என அவரின் மனைவியாக நடிக்கும் சிம்ரனுக்கு பிடிக்காது. ஆனால் காந்தியவாதியாக இருக்க விக்ரமுக்கும் பிடிக்காது. ஒரு கட்டத்தில் பொங்கி எழ தன் வீட்டின் எதிர்ப்புக்கு ஆளாவார் விக்ரம்.

ஒரு கும்பலில் போய் தன்னை இணைத்துக் கொள்வார். அதனால் போலீஸாக வரும் துருவ் விக்ரமுக்கும் விக்ரமுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் இந்தப் படத்தின் கதை. படம் கொரானா காலத்தில் ஓடிடியில் ரிலீஸானதால் மக்கள் கொஞ்சம் ஏமாந்துதான் போயிருந்தனர்.

ஏனெனில் தியேட்டரில் மட்டும் ரிலீஸாகியிருந்தால் கண்டிப்பாக இந்தப் படத்திற்கு இன்னும் வரவேற்பு அதிகமாக இருந்திருக்கும் என்பது பலரின் கருத்தாக இருந்தது. இதை பூர்த்தி செய்யும் வகையில் அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக போவதாக கார்த்திக் சுப்பராஜ் சமீபத்திய ஒரு ஈவண்ட்டில் கூறியிருக்கிறார்.

அதற்கான வேலையில்தான் தற்போது தான் இருப்பதாகவும் அந்தப் படம் ஒரு வேளை 2027 அல்லது 2028ல் வெளியாகும் என்றும் கூறியிருக்கிறார். தியேட்டரில் அதன் முதல் பாகத்தை தவறவிட்டதற்கு இரண்டாம் பாகத்தை தியேட்டரில் கண்டுகளிக்கலாம்.