ஸ்ருதிஹாசனை கடத்த முயன்ற கும்பல்… மகாநதிக்கு விதை போட்ட திடுக்கிடும் உண்மைச் சம்பவம்..

கடந்த 1994 ஆம் ஆண்டு கமல்ஹாசன், சுகன்யா, பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “மகாநதி”. கமல்ஹாசன், ரா. கி. ரங்கராஜன் ஆகியோர் இத்திரைப்படத்திற்கு திரைக்கதை எழுத, சந்தான பாரதி இத்திரைப்படத்தை இயக்கினார்.

இத்திரைப்படத்தின் கதை என்னவென்றால், மனைவியை இழந்த கமல்ஹாசன், தனது இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் கமல்ஹாசன், மற்றொருவருடன் இணைந்து ஃபைனான்ஸ் கம்பெனி தொடங்குகிறார். கம்பெனி தொடங்கிய சிறு நாட்களிலேயே கமல்ஹாசனின் பார்ட்னர் வாடிக்கையாளர்களின் பணத்துடன் தப்பித்துவிடுகிறார். அதன் பின் ஜெயிலுக்கு சென்று வெளியே வரும் கமல்ஹாசன் தனது மகள் மற்றும் மகனை தேடி அழைகிறார்.

மகனை ஒரு வழியாக கண்டுபிடித்த கமல்ஹாசன், அதன் பின் தனது மகள் கொல்கத்தாவில் சோனாகாச்சி என்ற தவறான தொழில் செய்யும் இடத்தில் மாட்டிக்கொண்டுள்ளார் என தெரியவருகிறது. தனது மகளையும் மீட்கும் இந்த நிலைக்கு காரணமானவரை பழி வாங்குகிறார். இதுதான் இத்திரைப்படத்தின் கதை.

ஆனால் இத்திரைப்படம் உருவாவதற்கு காரணமாக இருந்தது, கமல்ஹாசன் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவமாம். அதாவது கமல்ஹாசனின் மகள்களான ஸ்ருதிஹாசனையும் அக்சராஹாசனையும் அவரது வீட்டில் வேலை செய்தவர்கள் பணத்திற்காக கடத்த முயன்றிருக்கிறார்கள். இது கமல்ஹாசனுக்கு தெரியவந்த பின் அந்த திட்டத்தை முறியடித்திருக்கிறார். இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் “மகாநதி” திரைப்படம் உருவாகி இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு “எனது வாழ்க்கையை மாற்றிய 70 திரைப்படங்கள்” என்ற பட்டியலில் “மகாநதி” திரைப்படத்தையும் குறிப்பிட்டிருந்தார் கமல்ஹாசன். அப்போதுதான் இந்த சம்பவத்தை அவர் பகிர்ந்துகொண்டார்.

Related Articles
Next Story
Share it