எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, புதுப்பேட்டை, லீ, வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பலேபாண்டியா என பல படங்களில் துணை நடிகராக அடையாளம் தெரியாத கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தின் நாயகனாக கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகமானார்.
அந்தப் படமே அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்த நிலையில், சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என வரிசையாக வெற்றி படங்களை தந்து வந்தார்.
இதையும் படிங்க: என்னதான் லேடி சூப்பர்ஸ்டாரா இருந்தாலும் அந்த விஷயத்துல கோட்ட விட்ட நயன்! கெத்து காட்டிய நடிகை
அதன் பின்னர் வெற்றி மற்றும் தோல்வி என மாறி மாறி விஜய் சேதுபதிக்கு வரத் தொடங்கின. ஒரு கட்டத்தில் அவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் பெரிதாக ஓடாமல் தோல்வியை தழுவின. அதன் பின்னர் விக்ரம் வேதா படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதிக்கு பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் கதாபாத்திரம் கிடைத்தது.
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாகவும் விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாகவும் விஜய் சேதுபதி நடித்தார். கடந்த ஆண்டு ஷாருக்கானுக்கு வில்லனாக பாலிவுட்டில் ஜவான் படத்தில் நடித்தார். மற்ற நடிகர்களுடன் இணைந்து நட்புக்காக சில படங்களிலும் நடித்து வந்தார்.
இதையும் படிங்க: சூர்யா இனி அந்த விஷயத்துல யோசித்து முடிவு எடுக்கறதுதான் நல்லது… எவ்ளோ டிராப்னு பாருங்க..!
2018 ஆம் ஆண்டு 96 படம் அவருக்கு வெற்றியை கொடுத்தது. அதன் பின்னர் 2024 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் விஜய் சேதுபதி நடித்தாலும் அவர் ஹீரோவாக நடித்த எந்த ஒரு படமும் பெரிதாக போகவில்லை. இந்நிலையில் ஐம்பதாவது படமாக கடந்த வாரம் வெளியான மகாராஜா விஜய் சேதுபதிக்கு மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது.
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா படம் பக்ரீத் பண்டிகையை குறித்து தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறையை பிளான் செய்து வெளியான நிலையில், 3 நாட்களில் அதிகாரப்பூர்வ வசூலாக 32.5 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பக்ரீத் பண்டிகையான நேற்று உலகம் முழுவதும் சுமார் 7.5 கோடி ரூபாய் வரை வசூல் செய்து 4 நாட்களில் 40 கோடி வசூலை மகாராஜா அள்ளி இருக்கிறது.
இதையும் படிங்க: அஜித் வீசிய அடுத்த வெடிகுண்டு!… விடாமுயற்சியில் சிக்கி தவிக்கும் மகிழ் திருமேனி!.
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…
Vijay antony:…
தமிழ் சினிமாவில்…
ரஹ்மான் மற்றும்…