More
Categories: Cinema News latest news

விஜய் சேதுபதிக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட்!.. 2வது நாளில் எகிறிய மகாராஜா வசூல்!.. இத்தனை கோடியா?..

விஜய் சேதுபதியின் 50வது படமாக இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான மகாராஜா திரைப்படம் திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஆக்ஷன் மற்றும் கிரைம் த்ரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் படமாக மகாராஜா ஏகப்பட்ட ட்விஸ்டுளுடன் உருவாகியுள்ள நிலையில் அந்தப் படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி, நட்டி நட்ராஜ், அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், சிங்கம்புலி, முனிஷ்காந்த், அருள் தாஸ், தேனப்பன், பாரதிராஜா, பாய்ஸ் மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: விஜய் சேதுபதி எடுத்த திடீர் முடிவு… காத்துவாக்குல வந்த சேதி..!

ஹீரோவாக விஜய் சேதுபதி இனிமேல் நடிக்கவே லாயக்கு இல்லை என கலாய்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தரமான சம்பவமாக மகாராஜா படத்தை இறக்கி தனது வெயிட்டை காட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி. அதுவும் அந்த இடைவேளை காட்சிக்கு முந்தைய சண்டையில் பாய்ஸ் மணிகண்டனின் தலையை துண்டாக வெட்டி எறிந்து விட்டு அந்த தலையை பார்த்து பேசும் வசனம் எல்லாம் அவரது நடிப்பு டாப் கிளாஸ்.

காமெடி நடிகராக நடித்து வந்த சிங்கம்புலி இந்த படத்தில் சபலிஸ்ட்டாக நடித்து ஸ்கோர் செய்துள்ளார். கிளைமேக்ஸ் காட்சியில் விஜய் சேதுபதி வீட்டிற்குள் எப்படி திருட வந்தேன் என நடித்துக் காட்டும் காட்சிகளில் அவரது நடிப்பு ஒட்டுமொத்த தியேட்டரையும் வியக்க வைத்துள்ளது. இனிமேல் நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் சிங்கம்புலி வலம் வருவார் என எதிர்பார்க்கலாம்.

இதையும் படிங்க: முரளிக்குப் பிரச்சனையே சேர்க்கை சரியில்லாதது தான்… பிரபலம் சொல்லும் தகவல்

முதல் நாளில் மகராஜா படம் 7 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், 2ம் நாளில் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக படம் 8 கோடி ரூபாய் வசூலையும் உலகம் முழுவதும் 15 கோடி ரூபாய் வசூலையும் ஈட்டியிருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த படம் நிச்சயம் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய வசூல் வேட்டையை குவிக்கும் படமாக மாறும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து படத்தை பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: ரிலீஸ் தேதிக்கே ஆப்பு!.. ஆடிப்போன வெங்கட்பிரபு!.. கோட் படத்திற்கு வந்த சிக்கல்!..

Published by
Saranya M

Recent Posts