More
Categories: Cinema News latest news

சன் டே சம்பவம்!.. மகாராஜாவை பார்க்க தியேட்டருக்கு குவிந்த ரசிகர்கள்!.. 3 நாள் வசூல் இவ்வளவா?..

தனது 50-வது படமான மகாராஜா படத்தை முடிந்தவரை நடிகர் விஜய் சேதுபதி புரமோட் செய்து வருகிறார். அதன் பலனாக ஞாயிற்றுக்கிழமை நேற்று ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக 9 கோடி ரூபாய்க்கு மேல் மகாராஜா படம் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், அபிராமி, நட்டி நட்ராஜ், மம்தா மோகன்தாஸ், சச்சனா, சிங்கம்புலி, முனிஷ்காந்த், மணிகண்டன், அருள்தாஸ், திவ்யபாரதி, பாரதிராஜா, தேனப்பன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: விஜய் சேதுபதி மகன் சூர்யாவின் பீனிக்ஸ் டீசர் பார்த்தீங்களா?.. அனல் அரசு சும்மா மிரட்டியிருக்காரே!..

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள மகாராஜா படத்துக்கு விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்த நிலையில் தமிழ் சினிமா ரசிகர்களும் படத்தை கொண்டாட ஆரம்பித்துள்ளனர். வெள்ளிக்கிழமை வெளியான மகாராஜா திரைப்படம் முதல் நாளில் நல்ல துவக்கத்தை அந்த நிலையில், சனிக்கிழமை அதன் வசூல் சற்று அதிகரித்தது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை ஒரேயடியாக இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் இதுவரையில் நடக்காத சாதனையை மகாராஜா நடத்தியது.

ஒரே நாளில் அதிக டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டு விஜய் சேதுபதியின் படம் அரண்மனை 4 படத்தின் வசூல் சாதனையை இந்த ஆண்டு முறியடித்துள்ளது. சுமார் 9 கோடி ரூபாய் சன் டே மட்டும் வந்துள்ள நிலையில், இதுவரை ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் 21 கோடி ரூபாய் வசூலை மகாராஜா திரைப்படம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: கல்யாணத்தில் கலக்கல் போஸ் கொடுத்த நிவேதா பெத்துராஜ்!.. ‘அண்ணியார்’ என குவியும் கமெண்ட்ஸ்!..

மேலும், உலக அளவில் 25 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வந்துள்ளதாக கூறுகின்றனர். திங்கட்கிழமை அன்று பக்ரீத் பண்டிகை காரணமாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்றும் மகாராஜா படத்தை பார்க்க அதிக எண்ணிக்கையிலான மக்கள் தியேட்டருக்கு கூடுவார்கள் என்பதால் நிச்சயம் படத்தின் வசூல் அதிகரிக்கும் என தெரிகிறது.

இந்த ஆண்டின் வெற்றிப்படங்கள் வரிசையில் மகாராஜாவுக்கு மிகப்பெரிய இடம் கிடைத்துள்ளது. அரண்மனை 4, கருடன் படத்திலிருந்து ஹிட் படமாக மகாராஜா மாறியுள்ளது. 100 கோடி வசூலை இந்தப் படம் தொடும் என எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிங்க: குட்டி பாப்பா டிரெஸ் போட்டு எல்லாத்தையும் காட்டும் ரைசா வில்சன்!.. இது செம ஹாட்டு!..

Published by
Saranya M