நேத்து ரம்பா!.. இன்னைக்கு யாருன்னு பாருங்க!.. தொடர்ந்து மீட்டிங் போடும் விஜய்!.. ஒருவேள இருக்குமோ?..

கோட் படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக நிறைவு செய்த நடிகர் விஜய் வெளிநாட்டில் ஓய்வெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகின. நேற்று நடிகை ரம்பாவின் குடும்பத்தினரை விஜய் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரல் ஆகின.
இந்நிலையில், தற்போது மகாராஜா படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதன் தளபதி விஜய்யை சந்தித்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், மகாராஜா படம் குறித்து டீட்டெய்லாக விஜய் பேசியபோது நான் அப்படியே ஃபிளாட் ஆகிட்டேன் என்றே குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நெருப்புடா!.. நெருங்குடா பார்ப்போம் மோடுக்கு மாறிய சூர்யா!.. கங்குவா படத்தின் ஃபயர் அப்டேட்!..
கோட் படத்திற்கு பிறகு விஜய் தளபதி 69 படத்தை பண்ணுவாரா? மாட்டாரா என்கிற கேள்விகள் ஒரு பக்கம் எழுந்து வருகின்றன. அடுத்ததாக அரசியல் கட்சி மீட்டிங் தொடர்பாக ஆயத்த பணிகளை நடிகர் விஜய் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீரென ரம்பா மற்றும் நித்திலன் சாமிநாதன் என சினிமா பிரபலங்களை சந்தித்து வருகிறார்.
தளபதி 69 படத்தை நிச்சயம் விஜய் தொடங்குவார் என்றும் அதற்கான ஆலோசனையில் தான் தற்போது அவர் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர். மகாராஜா படத்தை விஜயின் அட்மினாக இருந்த ஜெகதீஷ் பிலிஸ் புதிதாக தொடங்கியுள்ள தி ரூட் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்த நிலையில், தான் இந்த சந்திப்பு நடந்திருப்பதாக கூறுகின்றனர்.
இதையும் படிங்க: இளையராஜாவோட பயோபிக் எப்படி இருக்கணும்னு தெரியுமா? பிரபலம் சொல்றதைக் கேளுங்க…
மகாராஜா இயக்குனர் இயக்கத்தில் விஜய் ஒரு படத்தில் நடித்தால் கூட தரமாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். ஆனால், விஜய்யின் அடுத்த மூவ் என்ன என்பதை அவர் தான் முடிவு செய்வார்.
கோட் படம் ஹாலிவுட் படங்களுடன் போட்டி போடும் அளவுக்கு உருவாக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. க்ளோனிங் தான் இந்த படத்தின் முக்கிய கான்செப்ட் எனக் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ‘இந்தியன் 2’ க்கு விகடன் கொடுத்த மார்க் எவ்வளவு தெரியுமா? கொடுத்த அட்வைஸையும் பாருங்க