பாராட்டு கிடைச்ச அளவுக்கு பாக்ஸ் ஆபிஸ் நிரம்புச்சா?.. மகாராஜா முதல் நாள் வசூல் எவ்வளவு?..

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நட்டி நட்ராஜ், அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி, முனீஸ்காந்த் என பல நடிகர்கள் நடித்துள்ள மகாராஜா திரைப்படம் நேற்று வெளியானது.

விஜய் சேதுபதியின் 50-வது படமான மகாராஜா திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாக வெற்றி கிடைத்த நிலையில் வசூல் ரீதியான வெற்றி கிடைத்ததா என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

இதையும் படிங்க: யாருக்கும் அடங்காத பயில்வான்! சூரி சொன்ன ஒரு வார்த்தையில் அடங்கிட்டாரே.. அப்படி என்ன சொன்னாரு?

புதுப்பேட்டை, நான் மகான் அல்ல என பல படங்களில் துணை நடிகராக நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நாயகனாக அறிமுகமானார். சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா திரைப்படம் விஜய் சேதுபதியை ரசிகர்கள் விரும்பும் மக்கள் செல்வனாக மாற்றியது.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சூது கவ்வும் என தொடர்ச்சியாக வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த விஜய் சேதுபதி தனது ஐம்பதாவது படத்துக்கும் மிரட்டலான கதையை தேர்வு செய்து நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான படங்களில் தலைசிறந்த படமாக மகாராஜா இருக்கும் என கண்டிப்பாக சொல்லலாம்.

இதையும் படிங்க: இது எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டிய கதை!.. சிவாஜி சொல்லியும் கேட்காத இயக்குனர்!.. படமோ பிளாப்!..

அதன் காரணமாகவே இந்தப் படத்துக்கு போட்டியாக எந்த படமும் இந்த வாரம் வெளியாகவில்லை. சுமார் இரண்டாயிரத்தை நெருங்கிய திரைகளில் நேற்று மகாராஜா திரைப்படம் வெளியான நிலையில், அந்த படத்தை மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து பாராட்டி வருகின்றனர்.

சூரி நடித்த கருடன் திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் மற்றும் ஒரு தரமான படமாக மகாராஜா வெளியாகி இருப்பதாக பலரும் கூறி வரும் நிலையில் முதல் நாள் மகாராஜா திரைப்படம் 4.5 கோடி ரூபாய் வசூலை இந்தியாவில் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் முதல் நாள் வசூல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’விசில் போடு’ சொதப்பலுக்கு விஜய்தான் காரணமாம்!.. அடுத்த பாட்டுல வெயிட்டான விஷயத்தை இறக்கும் யுவன்!

Related Articles
Next Story
Share it