Cinema News
சீனாவிலும் வசூலை அள்ளும் மகாராஜா!.. 2 நாளில் எவ்வளவு கோடி தெரியுமா?…
Maharaja movie: நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து ஜூன் மாதம் வெளியான திரைப்படம்தான் மகாராஜா. ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு குரங்கு பொம்மை என்கிற படத்தை இயக்கியவர்தான் நித்திலன் சுவாமிநாதன். அந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது.
அதன்பின்னர் மகாராஜா கதையை உருவாக்கினார். பல நடிகர்களிடமும் சென்று கதை சொன்னார். ஆனால், யாரும் ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் பள்ளிக்கு போகும் சிறுமிக்கு அப்பாவாக நடிக்க வேண்டும் என்பதை யாரும் ஏற்கவில்லை. ஆனால், அந்த கதையில் நடிக்க விஜய் சேதுபதி முன் வந்தார்.
இதையும் படிங்க: இப்படி ஒரு ஆளை நான் பார்த்ததே இல்ல!.. சிவகார்த்திகேயன் பற்றி நெகிழும் தாடி பாலாஜி!..
படத்தின் துவக்க காட்சியில் போலிஸ் நிலையத்திற்கு செல்லும் விஜய் சேதுபதி லட்சுமியை காணவில்லை என்பார். வீட்டில் இருந்த குப்பைத்தொட்டியைத்தான் அவர் லட்சுமி என சொல்கிறார் என போலீசாருக்கு தெரிய வரும். அதன்பின், அவரின் மகளை சிலர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு போனது பின்னர் தெரியவரும்.
அவர்களை கண்டிபிடித்து ஒவ்வொருவராக விஜய் சேதுபதி கொலை செய்வார். ஒருகட்டத்தில் அவருக்கு போலிஸ் அதிகாரிகளும் உதவி செய்வார்கள். இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்த படங்கள் தோல்வியை பெற்றுவந்த நிலையில் மகாராஜா அவருக்கு ஹிட் படமாக அமைந்தது.
அதோடு, இந்த படம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இப்போது ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் சமீபத்தில் மகாராஜா திரைப்படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு சீனாவில் வெளியானது. அதன்பின், சீன ரசிகர்கள் இப்படத்தை தியேட்டரில் ரசிக்கும் வீடியோக்களும் வெளியானது.
சீனாவில் 40 ஆயிரம் தியேட்டர்களில் வெளியான மகாராஜா திரைப்படம் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக இப்போது செய்திகள் வெளிவந்துள்ளது. இதற்கு முன் அமீர்கான் நடிப்பில் உருவான தங்கல் படம் சீனாவில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்போது முதன் முறையாக ஒரு தமிழ் படம் சீனாவில் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இதையும் படிங்க: சூர்யாவுக்கு சூனியம் வச்சிட்டாங்களா!.. அதுவும் அந்த நடிகர்களா?.. என்னென்ன சொல்றாரு பாருங்க..