Actor Vijaysethupathi: மக்கள் செல்வனாக அனைவர் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. ஆரம்பத்தில் கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய்சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தில் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு தொடர்ந்து ஹீரோவாக படங்களில் நடித்து வந்த விஜய்சேதுபதியை அடுத்த கட்ட லெவலுக்கு கொண்டு போன படமாக அமைந்தது சேதுபதி படம்.
சேதுபதி படத்தில் ஒரு பக்கா ஆக்ஷன் ஹீரோவாக தன்னை காட்டினார். அந்தப் படமும் பெரிய அளவில் பேசப்பட்டது. அதனை தொடர்ந்து வில்லனாக அவதரித்த விஜய்சேதுபதி ஒரு மாஸ் ஹீரோவாக வளர்ந்தார். ஹிந்தி, தெலுங்கு என பிறமொழி படங்களிலும் தன் நடிப்பை வெளிப்படுத்தினார் விஜய்சேதுபதி.
இதையும் படிங்க: அந்த ஒரு படத்தால என் தூக்கமே போச்சு… எவ்ளோ பெரிய இயக்குனர்… அவருக்கா அந்த நிலைமை?
இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 14 ஆம் தேதி ரிலீஸான திரைப்படம் மகாராஜா. நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் நேற்றைய முடிவில் உலகளவில் 100 கோடி வசூலித்து சாதனை படைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதுவும் புள்ளி விவரங்களை ஆய்வு செய்து வெளியிடும் sacnilk ஆய்வின் படி இந்தாண்டின் முதல் 100 கோடி வசூலை தொட்ட தமிழ் படம் என்ற சாதனையையும் பெற்றிருக்கிறதாம்.
இதற்கு முன் வெளியான ஹாரர் த்ரில்லர் படமான அரண்மனை 4 திரைப்படம் கிட்டத்தட்ட 99 கோடி வரை வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா திரைப்படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து அனுராஜ் காஷ்யப், நட்டி, அபிராமி போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தார்கள். படம் ரிலீஸாகி இன்றோடு 20 நாள் ஆகியும் இந்தப் படத்தின் மீதான் ஹைப் இன்னும் எகிறிக் கொண்டேதான் இருக்கின்றது.
இதையும் படிங்க: நயன்தாராவை நடிக்க வச்சதுதான் நான் பண்ண ஒரே தப்பு! தனுஷ் பட இயக்குனர் ஆதங்கம்
சரியாக 17 நாள்களில் மகாராஜா திரைப்படம் 76 கோடி வரை வசூலித்திருந்ததாம். இதோடு ஓவர் சீஸ் வசூல் எல்லாம் சேர்த்து உலகளவில் 100 கோடி வரை வசூலித்திருப்பதாக இந்த புள்ளி விவரம் சொல்கிறது.இந்த வருடத்தை பொறுத்தவரைக்கும் தமிழ் சினிமா கொஞ்சம் போராட்டத்தையே எதிர் கொண்டு வந்தது.
அதன் பிறகு அரண்மனை 4 திரைப்படம் வெளியாகி ஆறுதலை கொடுத்தது. இப்போது வசூலில் பார்க்கும் போது இந்தாண்டின் 100 கோடி வசூல் என்றளவில் மகாராஜா திரைப்படம் முதல் இடத்தில் இருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் விஜய்சேதுபதியின் கெரியரிலேயே இதுதான் அவருக்கு 100 கோடி தொட்ட முதல் படம் என்றும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: சூரியின் பரோட்டா காமெடி வர வேண்டியது ஜெயம் ரவி படத்துலதான்!.. எப்படி மிஸ் ஆச்சி தெரியுமா?..
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…