More
Categories: latest news tamil movie reviews

விஜய் சேதுபதி படம் மரண மாஸா?.. அய்யோ முடியல பாஸா?.. மகாராஜா விமர்சனம் இதோ!..

குரங்கு பொம்மை இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், பாரதிராஜா, திவ்ய பாரதி, அபிராமி, முனிஷ்காந்த், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள மகாராஜா திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் படங்கள் சூப்பராகவும் அவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் ஓடாமல் போகும் நிலையில், இந்த படத்தில் கொஞ்சம் நெகட்டிவ் ஷேட் கலந்த கதாபாத்திரத்திலேயே வெறித்தனம் காட்டி நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்த அனுராக் காஷ்யப் கடைசியாக விஜய்யின் லியோ படத்தில் ஒரே ஒரு சீனில் வந்து செல்வார். பாலிவுட்டின் பிரபல இயக்குனரான அனுராக் காஷ்யப் தன்னை வந்து இளம் இயக்குனர்கள் சந்தித்து பேச வேண்டும் என்றாலும் ஒரு அமவுண்ட் கொடுக்க வேண்டும் என சமீபத்தில் கேட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு நடிக்க ஒரு வாய்ப்பை கொடுத்து நல்ல சம்பளத்தையும் விஜய் சேதுபதியின் 50வது படத்தில் கொடுத்துள்ளனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஷங்கர் பிரம்மாண்ட இயக்குனராக இதுதான் காரணமாம்… யாருமே கேள்விப்படாத தகவலா இருக்கே..!

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக அனுராக் காஷ்யப் நடித்துள்ளார். தண்டு பாளையம் படத்தில் எப்படி வீட்டில் திருடி விட்டு பெண்களை பலாத்காரம் செய்து விட்டு ஒரு திருட்டுக் கும்பல் கிளம்புமோ அதே போலத்தான் இந்த படத்தில் அனுராக் காஷ்யப்பின் கதாபாத்திரம். அவருக்கு மனைவியாக அபிராமி நடித்துள்ளார்.

மகாராஜா எனும் பெயரில் சவரத் தொழில் செய்யும் விஜய் சேதுபதி தனது வீட்டில் இருந்த லட்சுமி காணாமல் போய் விட்டது என போலீஸ் அதிகாரியான நட்டி நட்ராஜிடம் புகார் கொடுக்கிறார். கடைசியில் அவர் சொல்லும் லட்சுமி என்பது அவர் வீட்டில் அவரது குழந்தையை விபத்து ஒன்றில் காப்பாற்றிய குப்பை தொட்டியைத்தான் என்பது போலீஸாருக்கு தெரிய வர கடுப்பாகி விடுகின்றனர்.

இதையும் படிங்க: விஜய் கட்சியில் இணையும் ராகவா லாரன்ஸ் – பாலா?!.. பரபர அப்டேட்!…

ஆனால், அதை கண்டு பிடித்து கொடுத்தால் ஒரு பெரிய அமவுண்ட் லஞ்சமாக தருகிறேன் என விஜய் சேதுபதி டீல் பேச, அந்த குப்பை தொட்டிக்கும் படத்திற்கும் என்ன சம்பந்தம். விஜய் சேதுபதிக்கும் அனுராக் காஷ்யப்புக்கும் என்ன பிரச்சனை? என ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளுடன் மகாராஜா படம் விறு விறுப்பாக செல்கிறது.

நடிப்பில் ஒவ்வொரு நடிகர்களும் போட்டி போட்டு நடித்தாலும், விஜய் சேதுபதி அனைவரையும் தனது நடிப்பால் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் என்று தான் சொல்ல வேண்டும். இரண்டாம் பாதியில் வரும் சில காட்சிகளில் ரசிகர்கள் கண்ணீரை கன்ட்ரோல் பண்ண முடியாமல் அழுது விடுவார்கள். நிச்சயம் இந்த படத்துக்கு விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரண்மனை 4, கருடன் பட வரிசையில் தமிழ் சினிமாவுக்கு அடுத்த வெற்றிப் படமாக மகாராஜா மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை வெளியாகவுள்ள மகாராஜா படத்தை தாராளமாக குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று பார்க்கலாம். டிக்கெட் ப்ரீ புக்கிங்கும் படத்துக்கு குவிந்து வரும் பாசிட்டிவ் விமர்சனங்களால் அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால், 4 நாட்களை டார்கெட் செய்து விஜய் சேதுபதி நாளை மகாராஜாவை களமிறக்குகிறார்.

மகாராஜா – மாஸ்!

ரேட்டிங் – 4/5

இதையும் படிங்க: 1000 படங்கள்! 50 வருட ரகசியம்.. குமரிமுத்துவின் டைரியை பார்த்து ஷாக் ஆன ஒட்டுமொத்த குடும்பம்

 

Published by
Saranya M

Recent Posts