mahen
90கள் காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றவர் மகேந்திரன். தொடர்ந்து பாண்டியராஜ் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்காக பல விருதுகளை பெற்றிருக்கிறார். இப்போது ஹீரோவாக பல படங்களில் நடித்தும் வருகிறார். சினிமாவிற்கு வந்து 30 வருடங்களுக்கும் மேலாகியும் இன்னும் அவர் ஒரு நிலையான இடத்தை அடையமுடியவில்லை.
இன்னும் சினிமாவில் போராடிதான் வருகிறார். அவர் ஹீரோவாக நடித்த விழா என்ற ஒரு படம் தான் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படம். 30 வயதுக்கு மேலாகியும் இன்னும் மாஸ்டர் என்ற அந்த அடையாளம் அவரை விட்டு போகவில்லை. அதோடு விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் நடித்ததனால் அந்த அடையாளத்தை அவர் எடுக்கவும் விரும்பவில்லை.
விஜயின் தீவிர ரசிகரும் கூட. இந்த நிலையில் மாஸ்டர் மகேந்திரன் ஒரு தெலுங்கு படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அந்தப் படத்தின் புரோமோஷன் சென்னையில் நடைபெற்ற போது பத்திரிக்கையாளர்கள் அவரை துருவி துருவி கேள்வி கேட்டனர். அதாவது தெலுங்கில் தொடர்ந்து மூன்று படங்களில் நடித்து வருகிறீர்கள்? ஏன் தமிழில் நடிக்கவில்லை என்று கேட்டனர்.
அதற்கு மகேந்திரன் தெலுங்கு ரசிகர்கள் படத்தை கொண்டாடுகிறார்கள். சின்ன நடிகர் பெரிய நடிகர் என்று அவர்கள் பாரபட்சம் பார்ப்பதே இல்லை. சின்ன பசங்க நடித்த படம் வந்தாலும் ஏதோ ஒரு புது படம் வந்திருக்குப்பா என்று தியேட்டருக்கு ஓடிப்போய் படம் பார்த்து விடுகின்றனர்.
ஆனால் இங்கு அப்படி இல்லை. இன்னும் ஒப்பனா சொல்ல வேண்டுமென்றால் சில வருடத்திற்கு முன்பு ஏன் மகேந்திரன் நடிச்ச படத்தை வாங்குனீங்க? அவருக்கு மார்கெட்டே இல்லப்பா என ஒரு வினியோகஸ்தர் சொன்னதா மகேந்திரன் சொல்லியிருக்கிறார். இதற்கு என்ன பதில் சொல்லணும்னு எனக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
இப்படி மகேந்திரன் பேசிய இந்த வீடியோ வலைதளங்களில் பரவ உடனே நெட்டிசன்கள் அவர் நடிச்ச விழா படம் ஒரு ரகம். மற்ற படங்கள் எல்லாம் ஓடி போற ரகம். இப்படி பேசியே இவர் உருப்படாம போய்விடுவாப்ல என்று கிண்டலடித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில்…
தற்போது அஜித்…
மணிரத்தினம் இயக்கிய…
நடிகர் சூர்யாவுக்கு…
கோலிவுட் முக்கிய…