More
Categories: Cinema News latest news

அயலான், கேப்டன் மில்லர் லைஃப் டைம் வசூலே இவ்ளோ வராது!.. முதல் நாளிலேயே கெத்துக் காட்டிய மகேஷ் பாபு!

இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு பொங்கல் வசூல் பெரியளவில் இருக்காது என்றே தெரிகிறது. கேப்டன் மில்லர் மற்றும் அயலான் உள்ளிட்ட படங்கள் 50 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அதிக பட்சமாக 50 முதல் 80 கோடி வசூல் வரை இரண்டு படங்களும் ஈட்ட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஆனால், இரண்டு படங்களின் லைஃப் டைம் வசூலை முதல் நாளிலேயே தெலுங்கு படமான குண்டூர் காரம் முறியடித்துள்ளது.

டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி உள்ளது. தெலுங்கில் அதற்கு போட்டி இளம் நடிகர் தேஜா நடிப்பில் வெளியான ஹனுமான் மட்டும் தான். ஆனால், மகேஷ் பாபுவின் மாஸ் ஆடியன்ஸுக்கு முன்னாடி அந்த படம் எல்லாம் பெரிதாக நிற்காது என்றே கூறுகின்றனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: 2ம் நாளில் தனுஷை நெருங்கிய சிவகார்த்திகேயன்!.. அட்டசாகம் செய்யும் அயலான்.. வசூல் எவ்வளவு?

அலா வைகுந்தபுரமுலோ படத்திற்கு பிறகு திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் அதே போல ஒரு குடும்ப மாஸ் மசாலா கதையை உருவாக்கி இருக்கிறார். இந்த படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். மற்றொரு ஹீரோயினாக மீனாக்‌ஷி செளத்ரியும் நடித்துள்ளார். விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திலும் இந்த மீனாக்‌ஷி தான் ஹீரோயின்.

முதல் நாளில் குண்டூர் காரம் படம் அதிகாரப்பூர்வமாக 94 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் மில்லர் மற்றும் அயலான் லைஃப் டைம் வசூலே இந்த அளவுக்கு வருமா? என்கிற கேள்விக்குறி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: கடைசி நேரத்துல என்ன இப்படி ஆகிடுச்சு.. இந்த சீசனிலும் கமல் ஃபேவரைட் போட்டியாளருக்கு கப் கிடைக்கலையா?

Published by
Saranya M

Recent Posts