மகேஷ் பாபுவிடம் இருக்கும் விநோத பழக்கம்… அதிர்ந்துப்போன தயாரிப்பாளர்… என்னப்பா சொல்றீங்க?
மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர். ஆனாலும் தமிழ்நாட்டில் இவருக்கு பல்லாயிரக்கணக்கோர் ரசிகர்களாக இருக்கிறார்கள். பல வருடங்களாக மகேஷ் பாபுவின் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் டப் செய்யப்பட்டு வெளியாகிக்கொண்டு இருக்கிறது. ஆதலால் பல வருடங்களாகவே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானவராக வலம் வருகிறார் மகேஷ் பாபு.
டப்பிங் படங்கள் வழியாக தமிழ் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்திருந்தாலும், மகேஷ் பாபு ஒரே ஒரு நேரடி தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். அத்திரைப்படத்தின் பெயர் “ஸ்பைடர்”. இத்திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். ஹாரீஸ் ஜெயராஜ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் மகேஷ் பாபுவின் நடிப்பை விட வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. எனினும் இத்திரைப்படம் சரியாக போகவில்லை.
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் மறைந்த நடிகரும் தயாரிப்பாளருமான வெங்கட் சுபா, தான் இறப்பதற்கு முன் ஒரு வீடியோவில் மகேஷ் பாபு குறித்த ஒரு விநோத தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது “ஸ்பைடர்” திரைப்படத்தை பார்த்த வெங்கட் சுபா, “இந்த படத்தில் வில்லன் எஸ்.ஜே.சூர்யாவுக்குத்தானே மாஸ் இருக்கிறது. இந்த படத்தில் நடிக்க எப்படி மகேஷ் பாபு ஒப்புக்கொண்டார்” என்று தனக்கு தானே கேட்டுக்கொண்டாராம். அதன் பின் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு தொடர்புகொண்டு இது குறித்து கேட்டாராம்.
அதற்கு அந்த தயாரிப்பாளர், “மகேஷ் பாபுவுக்கு ஒரு பழக்கம் உண்டு. பல வெற்றிகளை கொடுத்த இயக்குனரை தேர்வு செய்தால் மட்டும் போதும். வெறும் ஒன் லைனை மட்டும் கேட்டுவிட்டு படம் நடிக்க ஒப்புக்கொள்வார். முழு கதையையும் கேட்க மாட்டார். அதே போல்தான் ஸ்பைடர் படத்திற்கும் வெறும் ஒன் லைன் மட்டும் கேட்டு ஓகே சொல்லிவிட்டார். திரைப்படத்தின் கதை விஷயத்தில் அவர் தலையிடவே மாட்டார்” என்று கூறினாராம். இதனை கேட்டதும் “மகேஷ் பாபுவுக்கு இப்படி ஒரு பழக்கம் இருக்கா?” என வெங்கட் சுபா வியந்துபோனாராம்.
இதையும் படிங்க: அஜித் ஆரம்பித்த பைக் டூர் நிறுவனம்.. முதலீடு மட்டும் இம்புட்டு கோடியா?.. பார்ட்னர் இவங்களா? சூப்பர் தகவல்!