தெரியாம மிஸ் பண்ணிட்டேன்.. ஹிட் இயக்குனரின் படத்தை தவறவிட்டு புலம்பும் ஸ்டார் நடிகர்…..!

Published on: April 19, 2022
mahesh babu
---Advertisement---

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இரண்டு மாஸ் ஹீரோக்களின் படங்கள் வெளியானது. அதில் ஒன்று விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட். மற்றொன்று கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் 2. இந்த இரண்டு படங்களில் கேஜிஎப் தான் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி வசூலையும் வாரி குவித்து வருகிறது. கேஜிஎப் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு படங்களுமே மெகா ஹிட் வெற்றி பெற்றுள்ளதால், கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அதன்படி இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 30 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளது. இன்னும் 70 சதவீத படப்பிடிப்பு உள்ளது. இந்த படத்தில் நாயகனாக பாகுபலி பட புகழ் நடிகர் பிரபாஸ் நடித்து வருகிறார்.

mahesh babu1

முன்னதாக இயக்குனர் பிரசாந்த் முதலில் இந்தப் படத்தின் கதையை தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவிடம் தான் கூறினாராம். ஆனால் மகேஷ் பாபு இந்த கதை பிடிக்கவில்லை என கூறிவிட்டாராம். அதன் பின்னரே பிரபாஸிடம் கூறி தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம்.

இந்நிலையில் நடிகர் மகேஷ் பாபு மிகுந்த சோகத்தில் உள்ளாராம். தற்போது கேஜிஎப் 2 வெளியாகி உலகளவில் வெற்றி பெற்றுள்ளதால், ஒருவேளை சலார் படமும் இதேபோல் வெற்றி பெற்று விடுமோ? நாம் ஒரு நல்ல படத்தை தவறவிட்டு விட்டோமோ என புலம்பி வருகிறாராம்.

Leave a Comment