உங்க இறப்பு கொண்டாடப்படுகிறது அப்பா... மகேஷ் பாபு தனது தந்தைக்கு எழுதிய கடிதம்... வைரலாகும் பின்னணி...

krishna and mahesh babu
மகேஷ் பாபு இறந்து போன தனது தந்தைக்கு எழுதி இருக்கும் மடல் குறித்த சமூக வலைத்தள போஸ்ட் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ராஜ குமாரடு படத்தின் மூலம் தெலுங்கில் நாயகனாக எண்ட்ரி கொடுத்தவர் மகேஷ் பாபு. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. வசூலில் சக்கை போடு போட்டதை அடுத்து அவரை ரசிகர்கள் ப்ரின்ஸ் என செல்லமாக அழைத்து வந்தனர். முதல் படத்திலேயே நந்து விருது மகேஷ் பாபுவிற்கு கிடைத்தது.

krishna and mahesh babu
இதை தொடர்ந்து வெளிவந்த இரண்டு படமும் மகேஷ் பாபுவிற்கு சரியான வரவேற்பை கொடுக்கவில்லை. தொடர்ச்சியாக முராரி படத்தில் நடித்தார். அந்த படம் இவரின் சினிமா வாழ்க்கையில் முக்கிய இடம் பிடித்தது. இதை தொடர்ந்து அவர் பல படங்கள் நடித்தாலும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.
தெலுங்கில் பூரி ஜெகன்நாதன் இயக்கத்தில் வெளியான போக்கிரி படம் அவர் சினிமா வாழ்க்கையையே மாற்றியது. தெலுங்கு சினிமா உலகில் அதிகம் வசூல் செய்யப்பட்ட படமாக உருவெடுத்தது. தற்போது தவிர்க்க முடியாத பிரபலமாக உருவாகி இருக்கும் மகேஷ் பாபு எஸ்.எஸ்.ராஜமௌலியின் பெயரிடப்படாத படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.

krishna and mahesh babu
அவர் சினிமா வாழ்க்கை இப்படி சென்று கொண்டிருக்கும் நிலையில், சொந்த வாழ்க்கை பல கசப்பை சுமந்து நிற்கிறது. இந்த வருட தொடக்கத்தில் அண்ணனையும், அம்மாவையும் இழந்த மகேஷ் பாபு சமீபத்தில் அவரின் தந்தையும் இழந்து இருக்கிறார். இந்த சம்பவத்திற்கு பிறகு தனது தந்தைக்கு ஒரு மடலை எழுதி இருக்கிறார். அதில், "உங்கள் வாழ்வு கொண்டாடப்பட்டது. உங்கள் இறப்பு இன்னும் அதிகமாகக் கொண்டாடப்படுகிறது. அதுதான் உங்கள் மகத்துவம்.. நீங்கள் உங்கள் வாழ்க்கையை பயப்படாமல் வாழ்ந்தீர்கள்.
https://www.instagram.com/p/ClVqsAVPYzH/?utm_source=ig_web_copy_link
எனது உத்வேகம்... எனது தைரியம்... மற்றும் முக்கியமாக நான் நினைத்த அனைத்தும் உங்களோடு போய்விட்டன. இதுநாள் வரை உணராத வலிமையை இப்போது நான் உணர்கிறேன்... இப்போது அச்சமற்றவனாக இருக்கிறேன்... உங்களின் வெளிச்சம் என்னுள் என்றும் ஜொலிக்கும். உங்களின் லெகசியை இனி நான் முன்னெடுத்துச் செல்வேன். மேலும் உங்களை பெருமைப்படுத்துவேன்... லவ் யூ நானா... மை சூப்பர் ஸ்டார் " என்று பதிவிட்டுள்ளார்.