சொந்த தந்தையின் பயோபிக்கில் நடிக்க மறுத்த ஹீரோ... அதுக்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?
காதல் காமெடி ஆக்சன் கலந்த மசாலா படங்களை விட மறைந்த தலைவர்கள் அல்லது பெரிய ஹீரோக்களின் பயோபிக் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. உதாரணமாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான மகாநதி படத்தை கூறலாம்.
இதேபோல் பல படங்கள் உள்ளன. மேலும் ஹீரோக்களும் பயோபிக் படங்களில் நடிக்கவே ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் பிரபல நடிகர் ஒருவர் அவரது சொந்த தந்தையின் பயோபிக் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வரும் நடிகர் மகேஷ் பாபு தான் அவரது தந்தை கிருஷ்ணாவின் பயோபிக்கில் நடிக்க மறுத்துள்ளார். தற்போது மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியுள்ள சர்காரு வாரி பாட்டா படம் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் படத்தின் புரமோஷனுக்காக பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் மகேஷ் பாபுவிடம், "உங்கள் அப்பாவின் வாழ்க்கை பயோபிக்காக எடுக்கப்பட்டால் அதில் நீங்க நடிப்பீர்களா?" என கேட்கப்பட்டது. இதற்கு சற்றும் யோசிக்காமல் நடிக்க மாட்டேன் என மகேஷ் பாபு கூறிவிட்டார்.
மேலும் அதற்கான காரணத்தை கூறிய மகேஷ் பாபு, "என்னை பொறுத்தவரை எனக்கு என் அப்பா தெய்வம் மாதிரி. அதனால் அவரின் பயோபிக்கில் நான் நடிக்க போவதில்லை. அதில் நடிப்பதை விட அதை தயாரிக்கவே நான் விரும்புகிறேன். சரியான திரைக்கதை அமைக்கப்பட்டால் அந்த படத்தை நானே தயாரிக்க தயாராக உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.