மகிழ்திருமேனியிடம் பருப்பு வேகாது போலயே!..அஜித்தை தட்டிக் கழித்த இயக்குனர்.. ஆரம்பமே சூப்பரா இருக்கே?..

ajith
கொஞ்ச கொஞ்சமாக வேகமெடுக்கிறது அஜித்தின் ஏகே 62 படம். இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. ஆனாலும் இதுவரை ஒரு அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையிலும் படத்தை பற்றி அப்டேட்கள் வந்து கொண்டிருக்கின்றன.
படத்தை இயக்கப்போவது மகிழ்திருமேனி தான் என்று 99.9 % உறுதியாகிவிட்டது. ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக லைக்கா நிறுவனம் அதை இன்னும் அறிவிக்காமலேயே இருக்கிறது. இதற்கிடையில் படத்திற்கான கதையை தயார் செய்யும் பொறுப்பை மகிழ்திருமேனியிடம் லைக்கா நிறுவனம் கொடுக்க அதற்கான கெடுவையும் விதித்தது.

ajith1
மகிழ் திருமேனி இரண்டு கதைகளை சொல்ல இரண்டுமே அஜித்திற்கும் சரி, லைக்கா நிறுவனத்திற்கும் சரி இரண்டு பேருக்குமே பிடித்து விட்டது. ஆனால் இந்த சம்பவத்திற்கு முன்னதாகவே அஜித் மகிழ் திருமேனியிடம் இரண்டு சிடிக்களை கொடுத்து இதில் ஏதாவது ஒன்றை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு கதை பண்ணலாமே என்ற ஆலோசனையை வழங்கியிருக்கிறார்.
ஆனால் எப்பொழுத் அஜித்திடம் இரண்டு சிடிக்கள் இருக்குமாம். துணிவு படத்தின் சமயத்திலயும் எச்.வினோத்திடம் சிடிக்களை கொடுத்திருக்கிறார். அந்த வகையில் உருவானது தான் துணிவு படம் என்று சொல்லப்படுகிறது. அமெரிக்க நடிகர் அல்பசினோவின் ஒரு கேங்க்ஸ்டர் படத்தை தான் வினோத்திடம் கொடுக்க அதை மையமாக வைத்து தான் துணிவு படம் எடுக்கப்பட்டதாம்.

ajith2
அதே ஃபார்முலாவைத் தான் மகிழ் திருமேனியிடம் காட்டியிருக்கிறார். அதுவும் அதே அமெரிக்க நடிகர் அல்பசினோவின் ஒரு படத்தின் சிடிதானாம். ஆனால் மகிழ் திருமேனி அதை மறுத்து விட்டாராம். சிடியை கொடுத்த அஜித்திடம் இதைவிட நம்ம கிட்ட தரமான கதை இருக்கு என்று சொல்லிவிட்டாராம். இந்த சுவாரஸ்ய தகவலை வலைப்பேச்சு பிஸ்மி கூறினார்.