Connect with us

வில்லன் அவதாரம் எடுத்த மகிழ்திருமேனி!.. ஏகே – 62 படத்திற்கு வந்த புது பிரச்சினை!..

mahil

Cinema News

வில்லன் அவதாரம் எடுத்த மகிழ்திருமேனி!.. ஏகே – 62 படத்திற்கு வந்த புது பிரச்சினை!..

அஜித்தின் நடிப்பில் இழுபறியாகிக் கொண்டே இருக்கும் திரைப்படம் தான் ஏகே – 62. இந்தப் படத்தினை பற்றி எந்த ஒரு அறிவுப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலும் படத்தை பற்றிய அப்டேட்கள் வந்து கொண்டே இருக்கின்றன. முதலில் இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்கப் போகிறார் என்பதில் இருந்து தொடங்கி,

தொடர்ந்து பல பிரச்சினைகளால் மகிழ் திருமேனி தான் இப்போது ஏகே 62 படத்தை இயக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது. படத்திற்குண்டான கதைகளையும் மகிழ் தயாராகும் வைத்திருக்கும் நிலையில் ஏகே 62 டேக் ஆஃப் ஆக ஏதோ சில இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

mahil1

mahil1

மேலும் படத்திற்கான தலைப்பையும் எப்பொழுது அறிவிப்பு வருமோ அதே நேரத்தில் கூடவே தலைப்பையும் சேர்த்து அறிவிக்கப்போவதாக கூறிவருகின்றனர். இந்த நிலையில் படத்தின் முதல் கட்ட செட்யூலை சென்னையில் தான் நடத்த போகிறார்களாம்.

சென்னையில் முடிந்தவுடன் அடுத்தக் கட்ட செட்யூலை வேறொரு இடத்தில் வைப்பதாக கூறுகின்றனர். அதற்கிடைப்பட்ட இடைவெளியில் மகிழ் திருமேனி ஒரு படத்தில் வில்லனாக ஏற்கெனவே நடித்துக் கொண்டிருந்தாராம். இப்பொழுது ஏகே 62 படத்தை இவர் தான் இயக்கப் போகிறார் என்று தெரிந்தவுடன் சீக்கிரம் இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்துவிட்டு போங்கள் என்று கூறுகிறார்களாம்.

mahil2

mahil2

முதல் செட்யூலை முடித்ததும் அந்த படத்தின் கால்ஷீட்டை முடிக்க திட்டமிட்டிருக்கிறாராம். அது என்ன படம் என்றால் பிரபுதேவாவின் நடிப்பில் தயாராகி வரும் ‘ரேக்லா’ திரைப்படத்தில் தான் வில்லனாக நடிக்கிறாராம் மகிழ் திருமேனி.

இதையும் படிங்க : மனோரமாகிட்ட மட்டும் நெருங்க முடியல.. ஆட்டம் காட்டிய வெண்ணிறாடை மூர்த்தி..

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top