---Advertisement---

அஜித்துக்கு BE 6 SUV காரை பரிசாக கொடுத்த மஹிந்திரா நிறுவனம்!.. விலை என்ன தெரியுமா?..

Published on: March 13, 2026
ajith
---Advertisement---

நடிகர் அஜித் சினிமாவில் நடிப்பதோடு மட்டும் இல்லாமல் கார் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர்.. கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து பல நாடுகளிலும் நடக்கும் கார் ரேஸ் போட்டிகளில் அவரின் டீம் கலந்து கொண்டு வருகிறது. மோட்டார் ஸ்போர்ட்ஸை இந்திய அளவில் பிரபலமாக்குவேன் என சொல்லியிருக்கிறார் அஜித்.

பலரையும் மோட்டார் ஸ்போர்ட்ஸ்க்குள் நான் கொண்டு வருவேன்.. ரசிகர்களும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதைப்பற்றி பேசுகிறேன்’ என தொடர்ந்து சொல்லி வருகிறார் அஜித். அவரின் குட் பேட் அக்லி வெளியாகி ஒரு வருடம் ஆகியும் அவரின் அடுத்த படத்தின் வேலைகள் துவங்கப்படவில்லை. எனவே, தொடர்ந்து கார் ரேஸ்களில் அஜித் கலந்துகொண்டு வருகிறார்..

இந்நிலையில், அஜித்குமாருக்கு கார் ரேஸ் மீதுள்ள ஆர்வத்தை பாராட்டும் வகையில் மகேந்திரா நிறுவனம் BE 6 SUV காரை அவருக்கு பரிசாக வழங்கியுள்ளது. இதன் மதிப்பு 30 லட்சம் என சொல்லப்படுகிறது. மகேந்திரா நிறுவனத்தின் ஆட்டோமேட்டிக் பிரிவு தலைவர் ஆர்/வேலுச்சாமி இந்த காரை அஜித்துக்கு பரிசளித்திருக்கிறார்.