மேலிடத்தில் இருந்து வந்த ஒரே ஒரு மெயில்! ஆடிப்போன ‘அமரன்’ படக்குழு.. இப்போ என்ன பண்ணுவாங்க?
Amaran Movie: கார்த்திக் நடித்து தோல்வியை தழுவிய படம்தான் அமரன். இப்போது அதே பட தலைப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க அந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம்தான் தயாரிக்கிறது. கார்த்திக் நடித்த அமரன் படம் தோல்வியை தழுவினாலும் ஒரே பாடல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திருப்பியவர். வெத்தல போட்ட சோக்குல என்ற பாடல் இப்போது வரைக்கும் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கின்ற பாடலாக அமைந்துள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கும் அமரன் படத்தின் டீஸர் வெளியாகி பெரும் சர்ச்சையில் சிக்கியது. படத்தின் டீஸரை பார்த்த சிலர் இஸ்லாமியர்களுக்கு எதிரான படமாக இருக்கும் என தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டங்களை நடத்தினார்கள்.
இதையும் படிங்க: ராத்திரி ஷோவிற்கு திருட்டுத்தனமாக சென்ற ரஜினிகாந்த்… வீட்டில் மாட்டிவிட்ட மழை… சுவாரஸ்யமா இருக்கே!..
உச்சக்கட்டமாக சிவகார்த்திகேயன் மற்றும் கமலின் உருவபொம்மையையும் எரித்தார்கள். இருந்தாலும் அது சம்பந்தமான காட்சிகள் படத்தில் இருக்குமா இல்லையா என படம் ரிலீஸ் ஆனபிறகுதான் தெரியும். ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்கில்தான் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.
அதனால் ராணுவவீரர் மாதிரியான தோற்றம் வேண்டுமென்பதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை எடுத்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். படம் ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ரிலீஸ் தேதியில் மாற்றம் வருவதாக சொல்லப்படுகிறது. அதனால் ஆகஸ்டில் படல் ரிலீஸ் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: எங்க அப்பா சரியான மிலிட்ரி… அந்த ஒரு விஷயத்தை சரியா செஞ்சிருக்கணும்… தளபதி சொல்லும் சீக்ரெட்
இதற்கிடையில் படத்தை பற்றி இன்னொரு புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியிருக்கின்றது. படத்தின் டீஸரில் சிவகார்த்திகேயன் ஒரு காட்சியில் கெட்ட வார்த்தையை பயன்படுத்தியிருப்பார். இது மேஜர் முகுந்த் வரதராஜன் பயோபிக் என்பதால் ராணுவ அதிகாரிகளிடமும் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. அதனால் டீஸரை பார்த்த ராணுவ அதிகாரி அமைப்பு இந்த கெட்டவார்த்தைக்கு பெரும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது.
மேலும் கமலுக்கு ராணுவமையம் சார்பாக ஒரு மெயிலும் அனுப்பப்பட்டிருக்கிறதாம். அதன் பிறகே கமல் இதற்காக தன் வருத்தத்தை தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: சினிமாவே வேணாம்!.. பிளாஸ்டிக் கடை போடப்போன கே.எஸ்.ரவிக்குமார்!.. அப்புறம் நடந்துதான் டிவிஸ்ட்!..