Connect with us
Major23

Cinema History

நாடகம் to சினிமா.. கம்பீரமான குரல்.. கவரும் நடிப்பு… மறக்க முடியாத மேஜர் சுந்தர்ராஜன்…

தமிழ்த்திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகர் மேஜர் சுந்தரராஜன். ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவர்.

அந்தக்காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி உடன் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். எம்ஜிஆர் மற்றும் சிவாஜி படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அத்தினார். 1962ல் பட்டினத்தார் என்ற படத்தில் அறிமுகம் ஆனார். இந்தப்படத்தில் சோழமன்னராக நடித்தார். தொடர்ந்து கே.பாலசந்தரின் இயக்கத்தில் நாடகங்களில் நடித்து வந்தார்.

1965ல் இவர் கே.பாலசந்தர் இயக்கத்தில் நாணல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் கே.ஆர்.விஜயா கதாநாயகியாக நடித்தார். அந்த காலகட்டத்தில் இந்தப்படம் சூப்பர்ஹிட் ஆனது. மேஜர் சுந்தரராஜனின் இயற்பெயர் ஸ்ரீனிவாசன் சுந்தரராஜன். இவர் தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்தவர்.

ஏவிஎம் நிறுவனம் மேஜர் சந்திரகாந்த் என்ற நாடகத்தை சினிமாவாக எடுத்தது. இந்தப் படத்தை கே.பாலந்தர் தான் இயக்கினார். 1966ல் வெளியான இந்தப்படத்தில் ஜெயலலிதாவும் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் மேஜர் சுந்தரராஜனின் நடிப்பு பலரையும் வெகுவாகக் கவர்ந்தது. இந்தப் படத்தில் நடித்த கேரக்டரில் இருந்து தான் இவருக்கு மேஜர் சுந்தரராஜன் என்ற பெயர் வந்தது.

Sivaji, Major

Sivaji, Major

தனது மிகைப்படுத்தப்படாத நடிப்பாலும், கம்பீரமான குரலாலும் தனது கதாபாத்திரங்களை மெருகூட்டினார் மேஜர் சுந்தரராஜன். இது அவருடைய புகழைத் தக்க வைத்துக் கொண்டது.தொடர்ந்து தமிழ்த்திரை உலகம் அப்பா வேடங்கள் என்றாலே மேஜர் சுந்தரராஜன் தான் என்ற நிலைமைக்கு வந்து விட்டது.

ஸ்ரீதர் தயாரித்து இயக்கிய படம் வெண்ணிற ஆடை. இந்தப் படத்தில் தான் ஜெயலலிதா அறிமுகம் ஆனார். இவரது தந்தையாக மேஜர் சுந்தரராஜன் நடித்தார். படத்தில் அவரது நடிப்பு பல தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது.

தெய்வச்செயல், குழந்தைக்காக உள்பட சில படங்களில் மேஜர் சுந்தரராஜன் ஹீரோவாகவும் நடித்து அசத்தினார். நடிகர் திலகம் சிவாஜியுடன் மேஜர் சுந்தரராஜன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். மோட்டார் சுந்தரம்பிள்ளை படத்தில் ஆரம்பித்த இவர்களது நட்பு 200 படங்கள் வரை நீடித்தது.

நிஜ வாழ்க்கையிலும் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். உயர்ந்த மனிதன், தெய்வ மகன், ஞான ஒளி, கௌரவம் ஆகிய படங்களில் இவர்களது காம்பினேஷன் சூப்பராக ஒர்க் அவுட் ஆனது.

அதே போல புரட்சித்தலைவர் எம்ஜிஆருடன் நம்நாடு, ரிக்ஷாக்காரன் உள்பட பல படங்களில் நடித்து புகழ்பெற்றார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்த படங்களிலும் நடித்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 900 படங்கள் வரை நடித்துள்ளார் என்பது தான் ஆச்சரியம்.

இவர் வெறும் நடிகர் மட்டுமல்ல. டைரக்டரும் கூட. படங்களில் நடித்துக்கொண்டே கல்தூண், ஊரும் உறவும், நெஞ்சங்கள், இன்று நீ நாளை நான், அந்த ஒரு நிமிடம் ஆகிய படங்களையும் இயக்கினார். தனது கடைசிகாலகட்டத்தில் இருதய நோயால் அவதிப்பட்டு 2003ல் காலமானார்.

இதையும் படிங்க: மேஜர் சுந்தர்ராஜன் கேட்ட உதவி!.. ஸ்டிரிக்ட் கண்டிஷன் போட்ட எம்ஜிஆர்.. பழச மறக்காத மக்கள் திலகம்

google news
Continue Reading

More in Cinema History

To Top