மாலத்தீவில் பெண்களுடன் பார்ட்டி பண்ண ம.க.பா ஆனந்த்… ஒரே மஜா குஜாலாத்தான் இருக்காரு

by Rohini |   ( Updated:2025-04-19 23:18:13  )
makapa
X

makapa

Ma.Ka.Pa.Anand: விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக இருந்து ரசிகர்களின் பேராதரவை பெற்றவராக இருந்து வருகிறார் ம.க.பா.ஆனந்த். தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் ம.க.பா. ஆனந்த். இவரும் தொகுப்பாளினி பிரியங்காவும் சேர்ந்தால் அந்த நிகழ்ச்சி களைகட்டும். இவர்களுக்காகவே அந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் ஏராளம். ஒருவருக்கொருவர் கிண்டலடித்தும் மற்றவர்களை கலாய்த்தும் இவர்கள் செய்யும் லூட்டி அனைவரையும் சிரிக்க வைக்கும்.

ம.க.பா. ஆனந்துக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். விஜய் டிவியில் மட்டுமில்லாமல் வெளி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மக்களை எண்டெர்டெயிண்ட் செய்து வருகிறார். ஆரம்பத்தில் கோவை சூரியன் பண்பலையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். ரேடியோ மிர்ச்சி பண்பலையில் தொகுப்பாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு முன் அது இது எது என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதுதான் மூலமாகத்தான் பெரும் கவனத்தை ஈர்த்தார். முதலில் அந்த நிகழ்ச்சியை சிவகார்த்திகேயன் தான் தொகுத்து வழங்கி வந்தார். அவர் சினிமாவிற்கு போன பிறகு இனிமேல் இவர்தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என ம.க.பா. ஆனந்தை அந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது சிவகார்த்திகேயன் தான்.

விஜய் டிவியில் இருந்து சந்தானம், சிவகார்த்திகேயன், யோகிபாபு என பல நடிகர்கள் மக்களின் கவனத்தை ஈர்க்க ம.க.பா. ஆனந்தும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். முதலில் வானவராயன் வல்லவராயன் படத்தில் ஹீரோவாக நடித்தார். ஆனால் சுமாரான வரவேற்பையே பெற்றது. தொடர்ந்து நவரச திலகம், கடலை, அட்டி, மீசைய முருக்கு, பஞ்சுமிட்டாய் போன்ற படங்களிலும் நடித்தார்.

இருந்தாலும் சின்னத்திரையில் கிடைக்கும் வரவேற்பு வெள்ளித்திரையில் அவருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது மாலத்தீவில் மஜா செய்து வருகிறார் ம.க.பா. ஆனந்த்.அது சம்பந்தமான வீடியோதான் இப்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/DIn9_tVyr1l/?igsh=bmsydmYzbzcxem5z

Next Story