விஜய் தொலைக்காட்சியின் பிரபல ஆங்கர் மா கா பா ஆனந்த் குறித்து இன்னொரு பிரபல ஆங்கர் சொல்லி இருக்கும் தகவல் ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் சின்னத்திரையில் பிரபல ஆங்கர் மாகா பா ஆனந்த் ஆரம்பகாலத்தில் சிவகார்த்திகேயன் நடித்தி வந்த அது இது எது நிகழ்ச்சி மூலம் அறிமுகமானார். அவரும் எஸ்கே போல ஸ்பாட் காமெடி கவுண்டர்களால ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தார்.
இதன் மூலம், விஜய் டிவியின் முக்கிய ஆங்கராக அவருக்கு இடம் கிடைத்தது. பிரபல நிகழ்ச்சிகளான சூப்பர் சிங்கர் முதல் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார். ஆண் தொகுப்பாளர்களில் மாகாபாவிற்கு எப்பொழுதுமே முதலிடம் தான் விஜய் டிவி கொடுத்து வந்தது.
அந்த வகையில் தற்போது மாகா நடத்திவரும் ஆண்டாகாகசம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் டிஆர்பியில் நல்ல இடம் பிடித்து வருகிறது. இவரின் காமெடி மட்டுமல்ல மற்ற பிரபலங்களுக்கு செய்யும் உதவிகளும் ரசிகர்களிடம் அடிக்கடி வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
பிரபல தொகுப்பாளினி பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளே இருந்தபோது இவர் ஒரு நிகழ்ச்சிக்காக அங்கு உள்ளே சென்றார். அப்பொழுது தன் தோழியை பார்த்து இவரும் நெகிழ்ச்சியாக இருந்தது பார்ப்பவர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்னொரு பிரபல தொகுப்பாளினியான ஜாக்லின் கூறும்போது எனக்கு நிகழ்ச்சி இல்லாத போது மாகாபா மூலம் ஈவன்ட் மாதம் இரண்டு வந்துவிடும். ஒரு ஈவென்டிற்கு 50 ஆயிரம் வரை சம்பளம் வாங்கி கொடுப்பார். அதன் மூலம் மாதம் ஒரு லட்ச ரூபாய் வைத்து தான் என்னுடைய வாழ்க்கையை நடத்தி வந்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்.
தான் மட்டுமல்லாமல் தன்னுடன் பணி செய்யும் மற்ற பிரபலங்களையும் தூக்கிவிடும் இவரின் குணம் பலரிடமும் தற்போது லைக்ஸ் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.





