இந்த பாடல்கள் எல்லாம் மகப ஆனந்த் பாடியதா?.. அட இத்தன நாளா தெரியாம போச்சே!..
மீடியாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என பெரும் தாகத்துடன் பாண்டிச்சேரியில் இருந்துசென்னைக்கு கிளம்பி வந்தவர் விஜேவான ம.க.ப.ஆனந்த். தான் அடைய வேண்டிய லட்சியத்தை எட்டும் வரை கிடைக்கிற வேலையை பார்த்துக் கொண்டிருந்தார் ம.க.ப.ஆனந்த். போஸ்ட்ர் ஒட்டுவது, சிடி கடையில் வேலை பார்ப்பது என கிடைத்த வேலைகளை செய்தார்.
அதன் தாக்கம் தான் ரேடியோ ஜாக்கியாக வேலையில் சேர்ந்தார். சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது மாதிரி ம.க.ப.ஆனந்த் போற இடமெல்லாம் தன் புகழை நாட்டினார். ரேடியோ ஜாக்கியில் பணிபுரியும் போதும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வந்தனர். அதன் விளையாக தான் விஜய் தொலைக்காட்சியில் நுழைய காரணமாக இருந்தது.
சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய ‘அது எது இது’ ஷோ தான் ம.க.ப.ஆனந்த் முதன் முதலில் தொகுத்து வழங்கிய பிரபலமான நிகழ்ச்சி. அதில் அவருக்கு கிடைத்த புகழ் தான் இன்று வரை அவரை மக்கள் நியாபகப்படுத்தி வருகிறார்கள். மேலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி அவரை எங்கேயோ கொண்டு போய் சேர்த்தது.
ம.க.ப.ஆனந்த் இல்லாமல் விஜய் தொலைக்காட்சி இல்லை என்ற அளவுக்கு மாறிவிட்டது. சூப்பர் சிங்கர் இந்த அளவுக்கு வெற்றி அடைய காரணம் ம.க.ப.ஆனந்த் செய்யும் சில பகடுதான்.வரும் விருந்தினர்களுடன் இவர் செய்யும் லூட்டி, மற்றொரு தொகுப்பாளினியான பிரியங்காவுடன் செய்யும் அரட்டை தான் காரணம்.
இப்படி பல வெற்றி வாகையை சூடி வரும் ம.க.ப.ஆனந்த் இயல்பாகவே பாடவும் செய்வார். சூப்பர் சிங்கர் மேடையில் அவ்வப்போது சில பாடல்களை பாடி நடுவர்களை ஆச்சரியப்படுத்துவார். இந்த நிலையில் சினிமாவிலும் ம.க.ப.ஆனந்த் ஒரு சில பாடல்களை பாடியிருக்கிறாராம்.
இதையும் படிங்க : பானுமதியை காத்திருக்க வைத்துவிட்டு ரொமான்ஸில் இறங்கிய ரோஜா… என்ன இருந்தாலும் இப்படியா பண்றது?
‘கடல’ என்ற படத்தில் ஆயாவ காணோம், ‘மாணிக்’ என்ற படத்தில் மாமா மருகயா, ‘பட்டிபுலம்’ என்ற படத்தில் லவ் பண்ணுங்க , ‘காட்டுப் புறா’ என்ற படத்தில் உயிரே என் உயிரே போன்ற பாடல்களை ம.க.ப.ஆனந்த் தான் பாடியிருக்கிறாராம்.