ரஜினி மேக்கப்பால் பாபா படத்துக்கு வந்த சிக்கல்… ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்டு!
ரஜினிகாந்த் இந்த வயதிலும் சூறாவளி போல் பல திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பதை நம் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். எப்போதும் துருதுருவென தேனீ போல் சுறுசுறுப்பாக இருக்கிறார் ரஜினிகாந்த். “வயதானாலும் உன் ஸ்டைலும் அழகும் கொஞ்சம் கூட மாறல” என்ற வசனத்தை போலவே வயதானாலும் சினிமாவின் மீதான ஈடுபாடு ரஜினிகாந்திற்கு குறையவே இல்லை. இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்த ஒரு சம்பவத்தை குறித்துதான் இப்போது நாம் பார்க்கப்போகிறோம்.
கடந்த 2002 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த “பாபா” திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தின் கதையை எழுதி தயாரிக்கவும் செய்தார் ரஜினிகாந்த். இத்திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தாலும் இத்திரைப்படம் சரியாக ஓடவில்லை.
“பாபா” திரைப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க, சோட்டா கே நாயுடு என்பவர் ஒளிப்பதிவு செய்திருந்தார். இத்திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின்போது மிகவும் சுறுசுறுப்பாக காட்சிகளை படமாக்கத் தொடங்கினார் ரஜினிகாந்த். அப்போது ஒளிப்பதிவாளர் சோட்டா கே நாயுடு ரஜினிகாந்தின் அருகில் வந்து, “சார், படப்பிடிப்பை ஒரு இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைத்துவிடலாம்” என கூறியிருக்கிறார். உடனே ரஜினிகாந்த் “ஏன்?” என கேட்க, அதற்கு ஒளிப்பதிவாளர் “சார், நீங்க படம் நடிச்சு மூணு வருஷம் ஆச்சு. மூணு வருஷமா மேக்கப்பே போடாததுனால உங்க முகத்துல இப்போ மேக்கப் நிக்கமாட்டிக்கிது. அதனால் குளோஷப் ஷாட் எல்லாம் எடுக்க முடியாது. ஒரு மாதம் ஷூட்டிங் தள்ளிப்போட்டா கூட உங்க முகத்தை செட் பண்ணிடலாம்” என கூறியிருக்கிறார்.
அதற்கு ரஜினிகாந்த், “நீங்க சொல்றது எனக்கு புரியுது. ஆனால் நாம் இப்போ எல்லாதையும் தயார் பண்ணிட்டோம். அதனால் எல்லா குளோசப் ஷாட்டையும் நாம ரெண்டு மாசம் கழிச்சி கடைசி நாளில் எடுத்துக்குவோம். மத்த Wide Shot எல்லாம் எடுத்துடலாம். ஆரம்பிங்க” என கூறி படப்பிடிப்பை தொடங்கிவிட்டாராம். இவ்வாறு சம யோசிதமாக சிந்தித்து பணத்தை வீணடிக்காமல் இருந்துள்ளார் ரஜினிகாந்த்.