Connect with us
SPB

Cinema History

எஸ்.பி.பி. எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் முதல் படத்திலேயே இயக்குனர் எடுத்த ரிஸ்க்.!..

தமிழ்த்திரை உலக வரலாற்றில் பாடகரைத் துணிச்சலாக ஹீரோவாக்கியவர் இயக்குனர் வசந்த். அப்படி உருவான படம் தான் கேளடி கண்மணி. எப்படி என்று பார்க்கலாம்.

பாலசந்தரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் வசந்த். அந்தவகையில் 1990ல் அவர் இயக்கிய படம் கேளடி கண்மணி. முதலில் அவர் அந்தக் கதைக்கு ஒரு நடுத்தர வயது ஹீரோவைத் தேடினார். தொடர்ந்து பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க முடிவு செய்தார்.

என்ன தான் எஸ்.பி.பி. பாடகர் என்றாலும், அவருக்குள்ளும் ஒரு நடிகன் இருந்தது தெரியவந்தது. தான் பாடும்போது அந்தப் பாடலில் வரும் ஹீரோவை மனதில் வைத்துத் தான் பாடுவாராம். இதை அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கேளடி கண்மணி படத்தில் நடிப்பது பற்றி இயக்குனர் வசந்த் எஸ்.பி.பி.யிடம் கதை சொன்னாராம். அதற்கு அவர், எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? எனக்கு பாட்டுத் தொழில் இருக்கிறது. ஆனால் உங்களுக்கு இது தான் முதல் படம். உங்களது எதிர்காலம் என்னால் கெட்டுவிடக்கூடாது. பார்த்துக்கொள்ளுங்கள் என்றாராம் எஸ்.பி.பி.

Keladi Kanmani

Keladi Kanmani

பாடல்கள் எல்லாமே அருமை. மண்ணில் இந்தக் காதலின்றி, நீ பாதி நான் பாதி, கற்பூர பொம்மை ஒன்று என எல்லாப் பாடல்களும் இளையராஜாவின் இசையில் தேன்மழையாகப் பொழிந்தன. அதிலும் எஸ்.பி.பி. மூச்சு விடாமல் பாடிய மண்ணில் இந்தக் காதலன்றி பாடல் செம மாஸ் ஹிட் ஆனது.

1990ல் வெளியான படம் கேளடி கண்மணி. படத்தில் எஸ்.பி.பி.யுடன் ராதிகா, ரமேஷ் அரவிந்த், விவேக், நீனா, கீதா, அஞ்சு, பூர்ணம் விஸ்வநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடித்ததற்காக ராதிகாவுக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. அதே போல தமிழக அரசின் சார்பாக சிறந்த திரைப்படத்திற்கான 2வது விருது, சிறந்த பாடலாசிரியராக வாலி, சிறந்த பாடகராக எஸ்.பி.பி. என 3 விருதுகள் கிடைத்தது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் இது.

google news
Continue Reading

More in Cinema History

To Top