என்னால இதெல்லாம் முடியாது… மலர் டீச்சரை அழ விட்ட படக்குழு…

by Akhilan |   ( Updated:2024-08-10 11:23:18  )
என்னால இதெல்லாம் முடியாது… மலர் டீச்சரை அழ விட்ட படக்குழு…
X

தமிழ் திரையிசையில் தனுஷின் மாரி-2 படப் பாடலான ரவுடி பேபி பாட்டுக்கு என்றென்றைக்கும் தனி இடமே உண்டு என்று சொல்லலாம். யுவன் இசையில் தனுஷ் - தீ பாடிய இந்தப் பாடல் 2019-ம் ஆண்டு யூடியூபில் பல சாதனைகளைத் தகர்த்தெறிந்தது.

2015-ல் வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்ட மாரி படத்தின் இரண்டாம் பாகமாக பாலாஜி மோகன் இயக்கத்தில் 2018ம் ஆண்டு மாரி 2 படம் வெளியானது. முதல் பாகத்தின் இசையமைப்பாளரான அனிருத்தே இந்தப் படத்திலும் தனுஷுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யுவன் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: தனுஷுக்கு சிம்பு எவ்வளவோ மேல்!.. இப்படியெல்லாம் அவர் பண்ணது இல்ல!.. விஷயம் இதுதான்!..

இதன்மூலம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் - யுவன் கூட்டணி இணைந்தது படத்தின் பாடல்கள் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. படத்தின் முதல் சிங்கிளாக 2018 அக்டோபர் 25-ம் தேதி ரவுடி பேபி பாடல் வெளியானது. பாடல் வெளியான முதலே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 2019 ஜனவரியில் யூடியூபில் வெளியான ரவுடி பேபி பாடல் தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய அளவில் பல சாதனைகளை யூடியூபில் படைத்தது.

தென்னிந்திய அளவில் முதல்முறையாக யூடியூபில் 150 கோடி பார்வைகளைக் கடந்த முதல் பாடல் என்கிற சாதனையை 2023 செப்டம்பர் 24-ல் ரவுடி பேபி பாடல் படைத்தது. தனுஷின் சென்சேஷனல் ஹிட்டான ஒய் திஸ் கொலவெறி பாடலை விடவும் யூடியூபில் அதிக பார்வைகளைப் பெற்ற பாடல் இது. பாடலின் ஒளிப்பதிவும் அதில் தனுஷ், சாய்பல்லவியின் நடனமும் வெகுவாக பாராட்டுப் பெற்றது.

ரவுடி பேபி பாடல் ஷூட்ட்க்கு முன் பிரபுதேவா கொடுத்த நடன அசைவுகளை 4 நாட்களாக பயிற்சி செய்தாராம் சாய் பல்லவி. குறிப்பிட்ட நாளில் நடன அசைவுகளை முழுமையாகப் பயிற்சி எடுத்து நம்பிக்கையோடு ஷூட்டுக்கு வந்திருக்கிறார். ஷூட்டிங்கில் செட்டை பார்த்தபிறகு ஒன்றிரண்டு நடன அசைவுகளை பிரபுதேவா மாற்றியிருக்கிறார்.

இதையும் படிங்க: நீங்க செஞ்சிட்டு போவீங்க.. அவனுங்க கிட்ட அது நடக்காதே… சூப்பர்ஸ்டாரே கடுப்பான சம்பவம்!

இதில், சாய்பல்லவி 2, 3 டேக்குகள் வாங்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில் நம்பிக்கை இழந்த சாய் பல்லவி, தன்னால் முடியுமா என்று நினைத்து அழுதேவிட்டாராம். அதன்பிறகு பிரபுதேவா அவரை சமாதானப்படுத்தி ஆட வைத்தாராம். இன்றளவும் சாய் பல்லவியின் சிறப்பான நடனம் இடம்பெற்ற பாடல்களில் முக்கியமானது ரவுடி பேபி.

Next Story