இளையராஜா நினைச்சிருந்தா அப்பாவ காப்பாத்திருக்க முடியும்!.. மலேசிய வாசுதேவன் மரணம் குறித்து மகன் பகீர் தகவல்..
தமிழ் சினிமாவில் தெம்மாங்கு பாட்டுக்கு சொந்தக்காரராக திகழ்ந்தவர் மலேசியா வாசுதேவன். முதலில் மலேசியாவில் பல நாடகங்களில் நடித்த அனுபவத்தினால் சென்னைக்கு ஒரு நடிகராக வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்தார். 70களில் 45 ஆவண படங்களில் நடித்துள்ள மலேசியா வாசுதேவன் இளையராஜாவின் பாவலர் பிரதர்ஸ் என்ற குழுவில் மேடை கச்சேரிகளில் பாடி வந்தவர் மலேசியா வாசுதேவன்.
முதன் முதலில் ஜி கே வெங்கடேஷ் இசையமைப்பில் "பொல்லாத உலகில் ஒரு போராட்டம்" என்ற படத்தில் அறிமுகமானாலும் பாரதிராஜாவின் 16 வயதினிலே என்ற படத்தில் "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு" என்ற பாடலை பாடியதன் மூலம் மிகவும் பிரபலமானார் மலேசியா வாசுதேவன். அதனைத் தொடர்ந்து பல படங்களில் ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்த மலேசியா வாசுதேவன் ஒரு கைதியின் டைரி என்ற படத்தில் வில்லனாக நடித்தார்.
அந்தப் படம் அவருக்கு பெரும் புகழையும் பெயரையும் பெற்று தந்தது. அதன் விளைவாக 85 படங்களுக்கும் மேலாக மலேசியா வாசுதேவன் நடித்து ஒரு சிறந்த நடிகர் என்பதையும் நிரூபித்தார். முதல் வசந்தம், ஊர்காவலன், ஜல்லிக்கட்டு போன்ற வெற்றிப் படங்களில் வில்லனாகவும் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேதங்களிலும் நடித்துள்ளார்.
நடிப்பு, பாடல் இவையெல்லாம் தாண்டி ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் .மேலும் ஒரு படத்திற்கு கதை வசனமும் எழுதி இருக்கிறார். இப்பேற்பட்ட ஒரு மகா நடிகருக்கு ஒரு பாடகருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் கிடைத்தது. மலேசியா வாசுதேவன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிறிது நாட்கள் மருத்துவமனையிலேயே இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.
2011 ஆம் ஆண்டில் மலேசியா வாசுதேவன் மரணம் அடைந்தார். இந்த நிலையில் இவருடைய கடைசி நிமிடம் குறித்து அவருடைய மகனும் நடிகரும் பாடகரும் ஆகிய யுகேந்திரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது மலேசியா வாசுதேவன் குடும்பமும் இளையராஜாவின் குடும்பமும் ஒரு சொந்த பந்தம் போலவே பழகி வந்தார்களாம். இரு குடும்பமும் ஒரே குடும்பமாகவே இருந்து வந்திருக்கின்றனர். இளையராஜாவின் பாட்டி மலேசியா வாசுதேவனை தன்னுடைய மகன் போலவே பார்த்து வந்தாராம்.
மலேசியா வாசுதேவன் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக மருத்துவமனையில் இருந்தபோது இளையராஜாவை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததாகவும் ஆனால் இளையராஜாவின் மனைவிதான் வந்து பார்த்தார் எனவும் யுகேந்திரன் கூறினார். அது மட்டும் இல்லாமல் இளையராஜாவின் மனைவியிடம் மலேசியா வாசுதேவனின் மனைவி "இளையராஜாவையும் கொஞ்சம் வந்து பார்த்துவிட்டு போக சொல்லுங்கள் ,அவர் இளையராஜாவின் ஞாபகமாகவே இருக்கிறார் "என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : டபுள் மீனிங் வசனத்தால் வாய்ப்பை இழந்த விஜய்… சரியான நேரத்தில் காப்பாற்றிய இயக்குனர்?
ஆனால் ஒரு வாரம் ஆகியும் இளையராஜா வந்து பார்க்கவில்லையாம். அவர் மரணம் அடையும் அந்த நாளில் மருத்துவர்கள் "இதற்கு மேல் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது" என்று சொல்லிவிட்டு போய்விட்டார்களாம். அதன் பிறகு மலேசியா வாசுதேவனுக்கு பொருத்தியிருந்த எல்லா எக்யூப்மெண்ட்ஸ்களையும் எடுத்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்த போது தான் இளையராஜா வந்தாராம். அவர் மருத்துவமனையில் காலடி எடுத்து வைக்கும் பொழுது தான் மலேசியா வாசுதேவனின் உயிர் பிரிந்ததாம். உடனே யுகேந்திரன் இளையராஜாவிடம் "இப்பதான் வந்தீர்களா? நீங்கள் வந்ததும் அவர் உயிர் பிரிந்து விட்டது, முன்பாகவே வந்து பார்த்திருக்கலாமே?" என்று மிகவும் கோபத்துடன் கேட்டாராம். அதன் பிறகு மலேசியா வாசுதேவனின் இறுதிச்சடங்கு முடியும் வரை இளையராஜா கூடவே இருந்ததாகவும் இதற்கு முன் யாருக்கும் அவர் இப்படி இருந்ததில்லை எனவும் யுகேந்திரன் அந்த பேட்டியில் கூறினார்.