Cinema History
இளையராஜா கொடுத்த வாய்ப்பு.. சிவாஜி போட்ட கண்டிஷன்!.. மலேசியா வாசுதேவன் நடிக்க வந்தது ஏன்?
எழுத்தாளரும், கவிஞருமான ராஜகம்பீரன் பாடகரும், நடிகருமான மலேசியாவாசுதேவன் பற்றி சில சுவையான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்னவென்று பார்ப்போமா…
சிவாஜி சொல்லும்போது எனக்கு மலேசியாவாசுதேவன் தான் பாடணும்னு கண்டிஷனே போட்டாராம். முதல் மரியாதை படத்துக்காக பூங்காற்று திரும்புமா என்ற பாடல் உருவானதும் அப்படித்தான். சிவாஜிக்காக படிக்காதவன் படத்தில் ஒரு கூட்டுக்கிளியாக பாடல் பாடியதும் இவர் தான்.
மிஸ்டர் பாரத் படத்தில் போட்டிப் பாடல். என்னம்மா கண்ணு என்ற அந்தப் பாடலில் எஸ்.பி.பி. குரலுக்கு சற்றும் சளைக்காமல் அட்டகாசமாகப் பாடி அசத்தியிருப்பார் மலேசியாவாசுதேவன் இவர் பெத்து எடுத்தவ தான் என சோகப்பாட்டையும் பாடி அசத்துவார். பொதுவாக என் மனசுத் தங்கம்னு குத்துப்பாட்டையும் பாடி அசத்துவார். இவருக்கு எல்லாப் பாடல்களுமே அத்துப்படி. இதுதான் ரஜினிகாந்தை சூப்பர்ஸ்டாராக மாற்றிய பாடல். இவர் ரஜினிக்காகப் பாடினால் ரஜினி பாடியது மாதிரியே இருக்கும். சிவாஜிக்காகப் பாடினால் சிவாஜி பாடியது மாதிரியே இருக்கும்.
ஆரம்பத்தில் ரப்பர் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அலுப்பு தெரியாமல் இருக்கப் பாட்டுப் பாடுவார்கள். அங்கு இவரது பெற்றோர்கள் பாடுவார்களாம். அந்த சத்தத்தைக் கேட்டே வளர்ந்தாராம் மலேசியாவாசுதேவன். 1944ல் கலை ஆர்வத்தில் நிறைய நாடகங்களில் நடிக்கிறார். பாட்டுப் பாடுகிறார். முதலில் நடிப்பதில் தான் ஆர்வம் காட்டுகிறார். பாவலர் பிரதர்ஸ்சின் கச்சேரிகளில் பாடுகிறார். இவரது பாடலைக் கேட்ட இசை அமைப்பாளர் வி.குமார் டெல்லி டூ மெட்ராஸ் படத்தில் வாய்ப்பு கொடுக்கிறார்.
எம்.எஸ்.வி. தன்னோட இசையில் பாரதவிலாஸ் படத்தில் பஞ்சாபி குரலில் பாட வாய்ப்பு கொடுக்கிறார். அதன்பின் இளையராஜா 16 வயதினிலே படத்துக்காக ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடல் வாய்ப்பைக் கொடுக்க அதில் பட்டையைக் கிளப்புகிறார் மலேசியா வாசுதேவன். அப்போது தான் அவர் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். செவ்வந்தி பூவெடுத்த சின்னாத்தா பாடலும் இவர் பாடியதுதான். ரஜினிகாந்துக்காக இவர் பாடிய பாடல்கள் எல்லாமே செம மாஸ் தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.