ஆள விடுமா தாயே...! தெரித்து ஓடும் தயாரிப்பாளர்கள்...! அத குறைச்சும் பயனில்லாமல் போச்சே...
கோலிவுட்டில் அறிமுகமான முதல் படமே சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படம். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருப்பார் நடிகை மாளவிகா மோகனன். முதல் படம் பெரிய மாஸ் படம் என்பதால் இவருக்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து இரண்டாவது படமாக விஜய் நடிப்பில் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். அந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட். இதன் மூலம் இவரின் மார்க்கெடி உயர ஆரம்பித்தது. நிறைய ரசிகர்கள் இவர் பின் சுற்றிக் கொண்டு இருந்தனர்.
ஆனால் இதையெல்லாம் ஓரங்கட்டுற மாதிரி இவரின் அடுத்த படம் அமைந்தது. தனுஷுடன் மாறன் என்ற படத்தில்
தனுஷ்க்கு ஜோடியாக நடித்தார். படம் படுதோல்வியை அடைந்தது. மேலும் இந்த படத்தில் மாளவிகாவின் நடிப்பு விமர்சனம் செய்யும் அளவுக்கு இருந்தது. சரியாக நடிக்கவில்லை என்று விமர்சித்து வருகின்றனர். ஆதலால் இவரின் படவாய்ப்புகள் குறைய தொடங்கியது.
படவாய்ப்புகளை மீண்டும் பெறுவதற்கு தனது கவர்ச்சிப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியாக பகிர தொடங்கினார். ஆனாலும் எந்த பலனும் இல்லை. கடைசியாக ஒரு முடிவெடுத்தார்.தனது சம்பளத்தில் பாதியாக குறைத்து தயாரிப்பாளர்களை அணுகினார். ஆனால் தயாரிப்பாளர்களோ இவரை கண்டாலே தெரிச்சு ஓட்டம் பிடிக்கின்றனர். அடுத்த முடிவு என்னவா இருக்குமோ? தெரியல.