மாளவிகா மோகனனுக்கு கல்யாணமா?.. மணமகள் போல ஜொலிக்கும் ஸ்டில்ஸ்.. என்ன சொன்னாரு தெரியுமா?

Published on: February 27, 2024
---Advertisement---

கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான மாளவிகா மோகனன் தளபதி விஜயுடன் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பின்னர் தனுஷுடன் திரைப்படத்தில் நடித்த அவர் சீயான் விக்ரமுடன் இணைந்து தந்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த திரைப்படம் மே மாதத்திற்கு மேல் தான் வெளியாகும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் காரணமாக பல பெரிய திரைப்படங்கள் தங்கள் ரிலீஸை மே மாதத்திற்கு மேல் தள்ளி வைத்துள்ளன.

இதையும் படிங்க: இதனால்தான் சால்வையை தூக்கி எறிந்தேன்!. விளக்கம் கொடுத்து வருத்தம் தெரிவித்த சிவக்குமார்!…

பிரபாஸ் உடன் இணைந்து ராஜாசாப் படத்தில் மாளவிகா மோகனன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் தற்போது லண்டனில் பிரபாஸ் ஓய்வெடுத்து வரும் நிலையில் அந்த படம் தொடங்க இன்னும் நான்கு மாத காலங்கள் ஆகும் என தெரிகிறது.

இந்நிலையில், திருமண வரவேற்புக்கு ரெடியானது போல உடைகளை அணிந்து கொண்டு நடிகை மாளவிகா மோகன் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். மேலும், தனக்கு திருமணம் எல்லாம் கிடையாது என கேப்ஷன் கொடுத்து ரசிகர்களை வசீகரித்து உள்ளார்.

இதையும் படிங்க: ஹாட்ரிக் பிளாப்!.. இப்படியே போனா மார்கெட் காலிதான்!.. சுதாரிப்பாரா ஜெயம் ரவி?!..

கவலையே படாதீங்க மல்லு உங்கள நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் சொன்ன பழ ரசிகர்கள் அவரது போஸ்டுக்கு கீழ் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

மணமகள் லுக்கில் மாஸ் காட்டுறீங்க மாளவிகா மோகனன் என்றும் சும்மா சொல்லுங்க மாப்பிள்ளை யார் என்று என்றும் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மாளவிகா மோகனன் ரகசிய திருமணம் செய்துக் கொண்டார் என்றே சில யூடியூப் சேனல்களில் இந்நேரம் தம்ப் நைல் போட்டு வீடியோ வெளியிட்டு இருப்பார்கள் என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.