
Cinema News
மாளவிகா மோகனிடம் விளையாட்டை காட்டிய அரசியல் பிரபலம்…! தீயாய் இணையத்தில் பரவும் தகவல்…..
மலையாள சினிமாவில் தன் வாழ்க்கையை முதன் முதலாக ஆரம்பித்தவர் நடிகை மாளவிகா மோகனன். ஏஆர் ரகுமான் இசையில் உருவான பியாண்ட் த க்ளவுட்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தமிழ் சினிமாவில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக முதன் முதலில் தமிழில் அறிமுகமானார்.
இதையடுத்து விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் என்ற படத்தில் நடித்தார்.அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து தனுஷுடன் சேர்ந்து மாறன் படத்தில் நடித்தார். ஆனால் படம் தோல்வி அடைந்தது. இதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் சமூக வலைதளங்களில் பிஸியாகவும் இருந்து வருகிறார்.
ட்விட்டர், இன்ஸ்டா போன்ற சமூக பக்கங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். விதவிதமான கோணங்களில் கவர்ச்சியாக போட்டோசூட் எடுத்து பதிவிட்டு வருகிறார்.மேலும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சமூக வலைதளங்கள் மூலம் பதிலளித்தும் வருகிறார்.
இந்த நிலையில் அண்மையில் இவர் ரசிகர்களிடம் ட்விட்டர் வாயிலாக ”ஏதேனும் ஒரு படம் அல்லது வெப் தொடர் பார்க்கலாம் என்று நினைக்கிறேன், தயவு செய்து ரசிகர்கள் நீங்கள் கூறுங்கள் என்ன பார்க்கலாம் என்று?” என கேட்டிருந்தார். அதற்கு காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரான கார்த்தி ப சிதம்பரம் ‘ Inventing Anna’ என்று பதில் போட்டிருப்பது அனைவருக்கும் வியப்பை தந்தது. இந்த செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.