
Cinema News
அசாத்திய வித்தையை காட்டி பா.ரஞ்சித்தை அசரவைத்த மாளவிகா மோகனன்… இவர் கிட்ட இப்படி ஒரு டேலண்ட்டா??
இளைஞர்களின் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்து வரும் மாளவிகா மோகனன், தனது அனல் பறக்கும் புகைப்படங்களால் சமீப காலமாக இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறார். குறிப்பாக அவரிந் கடற்கரை புகைப்படங்கள் பார்வையாளர்களை ஸ்தம்பிக்க வைப்பவை. மாளவிகா மோகனனின் புகைப்படங்களுக்காக அவரது சமூக வலைத்தளப் பக்கத்தை தேவுடு காத்து வரும் ரசிகர்களும் பலர் உண்டு.

Malavika Mohanan
இந்த நிலையில் மாளவிகா மோகனன், இயக்குனர் பா.ரஞ்சித்தை தனது அசரவைக்கும் திறமையால் அசத்தியது குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது.

Thangalaan
பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “தங்கலான்”. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Pa Ranjith
இந்த நிலையில் இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன் ஏற்று நடிக்கும் கதாப்பாத்திரத்திற்கு சிலம்பம் சுற்றும் காட்சிகளை எழுதியுள்ளாராம் பா.ரஞ்சித். ஆனால் மாளவிகா மோகனனுக்கோ சுத்தமாக சிலம்பம் சுற்ற தெரியவில்லையாம்.
ஆதலால் பா. ரஞ்சித் சிலம்பம் கற்றுக்கொடுக்கும் மாஸ்டர் ஒருவரை வரச்செய்து மாளவிகா மோகனனுக்கு சிலம்பம் கற்றுத்தர நியமித்தாராம். அவரிடம் தீவிரமாக சிலம்பம் சுற்றும் பயிற்சியில் ஈடுபட்டு வந்த மாளவிகா மோகனன், பத்து நாட்களிலேயே சிறப்பாக பயிற்சிப் பெற்றுவிட்டாராம்.
இதையும் படிங்க: எஸ்.ஜே.சூர்யாவை இரவும் பகலுமாக டார்ச்சர் செய்யும் கார்த்திக் சுப்புராஜ்?? என்ன இருந்தாலும் இப்படியா பண்ணுறது!!

Malavika Mohanan
மேலும் பா.ரஞ்சித்தின் முன் அவர் மிக சுலபமாகவும் லாவகமாகவும் சிலம்பம் சுற்றிக்காட்டினாராம். இதனை பார்த்த பா.ரஞ்சித் அசந்துப்போனாராம். இவ்வாறு மிக குறுகிற காலத்திலேயே மாளவிகா மோகனன் சிலம்பம் சுற்றக் கற்றுக்கொண்டு பா.ரஞ்சித்தை அசரவைத்துள்ளார்.