Entertainment News
இப்டி டிரெஸ் போட்டு மனச கெடுக்குறாரே மாளவிகா!.. சீயானும் செம ஸ்டைலா இருக்காரே!…
Malavika mohanan: கேரளாவை சேர்ந்தவர் மாளவிகா மோகனன். இவரின் அப்பா மலையாள திரைப்படங்களில் நடன இயக்குனராக வேலை செய்தவர். அப்போது அவருக்கு உதவி செய்வதற்காக ஷூட்டிங் நடக்கும் இடங்களுக்கு செல்லும்போது மம்முட்டியின் கண்ணில் பட்டு நடிகையாக மாறியவர் மாளவிகா.
இவரின் முதல் ஹீரோ துல்கர் சல்மான். அதன்பின் சில மலையாள படங்களில் நடித்தார். ஆனால், கோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான் அவரின் ஆசையாக இருந்தது. எனவே, கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட துவங்கினார்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகவே காஜி ரசிகர்கள் இவரின் ரசிகர்களாக உருவானார்கள். ரஜினி முக்கிய வேடத்தில் நடித்த பேட்ட திரைப்படத்தில் சசிக்குமாரின் மனைவியாக நடித்திருந்தார். ஆனால், இந்த படத்தில் இழுத்து மூடி நடித்திருந்தார். அதன்பின் விஜயுடன் மாஸ்டர் மற்றும் தனுஷுடன் மாறன் ஆகிய படங்களில் நடித்தார்.
அதன்பின் பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், கிடைக்கவில்லை. ஆனால், பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த தங்கலான் படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்தார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழில் வரவேற்பை பெற்ற நிலையில் இப்படம் வட இந்தியாவில் ஹிந்தி மொழியில் வருகிற 30ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே, சியான் விக்ரமும், மாளவிகாவும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கவர்ச்சி உடையில் மாளவிகாவும், கோட் சூட்டில் ஸ்டைலான லுக்கில் சியான் விக்ரமும் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.