More
Categories: Entertainment News

எத்தனை பேர் வந்தாலும் நீதான் டாப்பு!. டாப் கியரில் போட்டு தூக்கும் மாளவிகா மோகனன்…

மலையாள திரையுலகில் அப்பா நடன இயக்குனராக இருந்ததால் அப்படியே சினிமாவுக்கு வந்தவர்தான் மாளவிகா மோகனன். அப்பாவுக்கு துணையாக போன போது ஒரு படப்பிடிப்பில் அவரை பார்த்து ‘நீ ஏன் நடிக்கக் கூடாது?’ என கேட்டவர் மம்முட்டி. அவரின் மகன் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க வைத்தார்.

Advertising
Advertising

மாளவிகா மோகனின் திரைவாழ்க்கை இப்படித்தான் துவங்கியது. அதன்பின் சில மலையாள திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார். ஆனால், சமூகவலைத்தளங்கள் மூலம் நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார். அதற்கு காரணம் கச்சிதமான கட்டழகை காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள்தான்.

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி ஹீரோவாக நடித்த பேட்ட படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அந்த படத்தில் அவருக்கு சின்ன வேடம்தான் கிடைத்தது. அடுத்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். மேலும், தனுஷுடன் மாறன் படத்தில் நடித்தார்.

இப்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஒருபக்கம், பாலிவுட் படங்களில் நடிக்கவும் முயற்சி செய்து வருகிறார். அதற்காக கவர்ச்சி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், புடவையையே கவர்ச்சியாக அணிந்து போஸ் கொடுத்து மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts