ஐயோ!.. இத கூட்டிட்டு வந்து ரஞ்சித் படும் அவஸ்தை இருக்கே?.. ‘தங்கலான்’ படப்பிடிப்பில் ரணகளம் பண்ணும் பிரபலம்..

by Rohini |   ( Updated:2023-01-25 03:00:05  )
thangalan
X

thangalan

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் தயாராகிக் கொண்டிருக்கும் படம் ‘தங்கலான்’. இந்த படத்திற்காக விக்ரம் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார். அது சம்பந்தப்பட்ட பல புகைப்படங்கள் படப்ப்டிப்பும் ஆரம்பம் முதலே வெளியாகி ஆர்வத்தை அதிகப்படுத்தின.

thangalan1

vikram

இதுபோதாது என்று அந்த கெட்டப்பையும் மீறி வேறொரு கெட்டப்பில் விக்ரம் வருகிறாராம். அதை மட்டும் சஸ்பென்ஸாக வைத்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதற்காக யாரையும் செட்டிற்குள் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது என்றும் கூறியிருக்கிறார்களாம். வெளியிலேயே விக்ரமை இப்பொழுது அதிகமாக பார்க்க முடிவதில்லை.

இதையும் படிங்க : காதலிக்க நேரமில்லை படத்தில் நடிக்க இருந்த சூப்பர் ஸ்டாரின் தந்தை… இதை நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!!

அந்த அளவுக்கு அந்த கெட்டப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் பா.ரஞ்சித். இது கே.ஜி.எஃப்ஃபில் நடக்கும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாராகிக் கொண்டிருக்கும் படம். மேலும் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை முன்னுதாரணமாக கொண்டு தயாராகிக் கொண்டிருக்கின்றன.

thangalan2

vikram

படப்ப்டிப்புகள் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்க மார்ச் மாதத்திற்குள் படத்தை முடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் பா.ரஞ்சித் இருக்கிறாராம்.இன்னும் விக்ரமிற்கும் பசுபதிக்கும் இடையே காட்சிகள் படமாக்கப்பட வேண்டியிருக்கிறதாம். இதற்கிடையில் படத்தில் நடிகை மாளவிகா மோகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

ஆனால் அம்மணியை ஒரு வழிக்கு கொண்டு வர பா.ரஞ்சித் படாத பாடு படுகிறாராம். சும்மாவே அம்மணி நடிப்பில் கில்லி. அந்த நடிப்பை கொண்டு வர திணறிக் கொண்டிருக்கிறாராம் ரஞ்சித். அதனால் மாளவிகா மோகனின் காட்சிகளை முடித்து விட்டு மும்பைக்கு அனுப்பிவிட்டு விக்ரம் பசுபதி காட்சிகளை படமாக்கலாம் என்ற ஐடியாவில் இருக்கிறார் போல. அதற்காக கூடவே இருந்து மாளவிகா மோகனின் காட்சிகளை முடிக்க விரைந்து கொண்டிருக்கிறாராம் ரஞ்சித்.

thanga3

malavika mohanan

Next Story