தேக்கடி தேக்குமரம்!.. லுங்கியுடன் மல்லு மாளவிகா மோகனன் என்ன பண்றாரு பாருங்க!..

by Saranya M |   ( Updated:2025-04-04 07:46:55  )
தேக்கடி தேக்குமரம்!.. லுங்கியுடன் மல்லு மாளவிகா மோகனன் என்ன பண்றாரு பாருங்க!..
X

#image_title

நடிகை மாளவிகா மோகனன் கடந்த சில வாரங்களாக தேக்கடியில் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் ஹிர்தயப்பூர்வம் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் கான்கிரீட் உலகை விட்டுச் சற்று விலகி அமைதியாக தான் ரசித்து வாழ்வதை விளக்கி ஒரு பெரிய பதிவுடன் சேர்த்து லுங்கி அணிந்துக்கொண்டுள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் மாலவிகா.

பிரபல ஒளிப்பதிவாளரான கே.யு. மோகனன் அவர்களின் மகளான மாளவிகா மோகனன் மலையாளத்தில் வெளியான பட்டம் போலே படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து நிரநாயக்கம், தி கிரேட் பாதர் போன்ற மலையாளப் படங்களிலே நடித்து வந்த மாளவிகா தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்தார். மேலும் தமிழில் மாஸ்டர், மாறன் மற்றும் தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், கார்த்தியின் சர்தார் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆக்‌ஷன் அவதாரத்தில் மிரட்டவுள்ளார்.

ஹிர்தயபோர்வம் என்ற மலையளப் படத்தின் படபிடிப்புக்காக தேக்கடி சென்றுள்ள மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் தான் கான்கிரீட் காடுகளில் இருந்து சற்று விலகி பறைகள் சத்தத்தை கேட்டு எழுந்து, காடுகளில் உள்ள பூக்களின் நருமணங்களை சுவாசிக்கிறேன். என்னை சுற்றியிருந்த அதிர்வுகளின் ஒலிகள் இல்லாமல் ஒரு அமைதியான சூழலில் தூங்கச் செல்வதும், யாருக்கும் தேரியாமல் மரங்களை கட்டி அணைப்பதும் அதிலிருந்து கிடைக்கும் மூல சக்தியை உள்வாங்கியும், அந்த நடு காட்டில் தோன்றும் முழு நிலவை அனுபவித்தும், நகர்புரத்தில் நாம் வடிக்கட்டி குடிக்கும் தண்ணீருக்கு பதிலாக தாதுக்கள் நிறைந்த தண்ணீரை குடிப்பதாகவும், மயிலின் அகவலுடன் எழுந்து, காரணமே இல்லாமல் சண்டைக்கு வரும் வான்கோழியையும், மசாலா பொருட்களின் மையமாக விளங்கும் தேக்கடியின் மசாலா வாசமும், நடு இரவில் திடீரென வரும் யானை சத்தம் என மாயாஜாலமான உலகில் தான் வாழ்ந்ததாக வர்ணித்து எழுதியுள்ளார்.

மேலும் மாளவிகா தான் லுங்கியுடன் சுதந்திரமாக காட்டில் திரியும் புகைப்படங்களையும், அவர் அனுபவித்து வரும் மந்திர இயற்கை சூழல் அனுபவத்தையும் தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

Next Story