என்னோட ஆல்டைம் ஃபேவரைட் தளபதி தான்.... யார் கூறியது தெரியுமா?
திரையுலகில் அப்போவும் சரி இப்போவும் சரி ரசிகர்களின் பேவரைட் நடிகை மாளவிகா தான். அப்போ வாழ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் சாங்ல வருவாங்களே அந்த மாளவிகா இப்போ பிகினி போட்டோஷூட்டில் கலக்கும் மாளவிகா மோகனன் அவ்ளோ தான் வித்தியாசம்.
ரஜினியின் பேட்ட படம் மூலம் அறிமுமான மாளவிகா மேனன் அடுத்ததாக விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இதற்கிடையில் அவ்வபோது மாலத்தீவிற்கு சென்று பிகினியில் வித விதமாக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தும் அளித்து வந்தார் மாளவிகா.
தற்போது பட வாய்ப்புகள் அவ்வளவாக இல்லாததால் மாளவிகா மிகவும் சாவகாசமாக தனது ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் உரையாடி வருகிறார். அதில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் மாளவிகா மேனன் பதிலளித்து வருகிறார்.
அந்த வகையில் ரசிகர் ஒருவர் நடிகர் விஜய் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன் கூறியதாவது, "நான் தளபதி விஜயை பற்றி பலமுறை பல இடங்களில் பேசி உள்ளேன். அவர் எனக்கு எவ்வளவு பிடித்தமானவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இப்போது தெரியாதவர்களுக்காக நான் இதை கூறுகிறேன். தளபதி விஜய் எப்போதும் எனக்கு ஸ்பெஷல் தான். நான் யாருடன் பணியாற்றினாலும், எங்கு இருந்தாலும் சரி எப்போதும் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்" என கூறியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.