அந்த ஹீரோ படத்துல நான் நடிக்கலைங்க... போட்டோ போட்டு முற்றுப்புள்ளி வைத்த நடிகை...!
பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி விஜய், தனுஷ் என அடுத்தடுத்து டாப் நடிகர்களின் படங்களில் நடித்தவர் தான் நடிகை மாளவிகா மேனன். எடுத்த எடுப்பிலேயே சூப்பர் ஸ்டார் படத்தில் நடித்ததால் நிச்சயம் பெரிய நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டார்.
ஆனால் இறுதியாக இவர் தனுஷுடன் இணைந்து நடித்த மாறன் படம் தோல்வி அடைந்தது. அதனை தொடர்ந்து மாளவிகா கைவசமும் படங்கள் இல்லாததால், தொடர்ந்து கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி பட வாய்ப்புகளை பெற போராடி கொண்டிருக்கிறார் மாளவிகா மேனன்.
இந்நிலையில் மாறன் படத்திற்கு பின்னர் மாளவிகா மோகனன் பாலிவுட் படம் ஒன்றில் பிரபல நடிகர் சல்மான் கானுடன் இணைந்து நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தன. இதனால் மாளவிகா பாலிவுட்டில் பிசியாகி விட்டார் என்றெல்லாம் கூறப்பட்டது.
ஆனால் அப்படியெல்லாம் எதுவும் கிடையாது அது வெறும் வதந்தி தான் என மாளவிகா அவரே அவரது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதன்படி அந்த செய்தியை ஸ்கிரீன் ஷாட் எடுத்து, "இது முற்றிலும் பொய்யான செய்தி. இதை ஏன் இங்கே போடுகிறேன் என்றால், பலரும் எனக்கு போன் செய்து தொல்லை செய்கிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இப்படி பதிவிட்டு இருக்கிறேன்" என விளக்கமும் கொடுத்துள்ளார்.
அந்த செய்தியை பார்த்ததும் வெறும் வதந்தி தானே என கடந்து செல்லாமல், இதற்காக நேரம் ஒதுக்கி விளக்கம் அளித்துள்ள மாளவிகாவின் செயல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.