அந்த மாதிரி கதையில் விஜயுடன் நடிக்கனும்....மாஸ்டர் நடிகைக்கு ஆசையை பாருங்களேன்...!
கோலிவுட் வசூல் மன்னன் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான அரபிக்குத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் விஜய் பார்க்க மிகவும் இளமையாகவும், ஃபிட்டாகவும் இருப்பதாக பலர் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி விஜயை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. பல திரைபிரபலங்களும் நடிகர் விஜயின் ரசிகர்களாக உள்ளனர். மேலும் அவருடன் இணைந்து நடிக்கவும் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் இளம் நடிகை ஒருவர் விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். அவர் வேறு யாருமல்ல இறுதியாக லோகேஷ் கனகராஜ் விஜய் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் ஜோடி போட்ட நடிகை மாளவிகா மோகனன் தான்.
இவர் சோசியல் மீடியாவில் எந்த அளவிற்கு ஆக்டிவாக உள்ளார் என்பது இவர் வெளியிடும் புகைப்படங்கள் மூலம் நாம் அனைவரும் அறிவோம். இந்நிலையில் காதலர் தினத்தன்று மாளவிகா சோசியல் மீடியாவில் தனது ரசிகர்களுடன் உரையாடி உள்ளார். அப்போது ரசிகர் ஒருவர், "மீண்டும் விஜய்யுடன் சேர்ந்து நடிப்பீர்களா? அப்படி நடிப்பதாக இருந்தால் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன் கூறியதாவது, "தளபதி விஜய் ஒரு முழுநீள ரொமான்ஸ் படத்தில் நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. எனவே அப்படி ஒரு படத்தில் அவர் திரும்ப நடித்தால் அந்த கதையில் அவருடன் இணைந்து மீண்டும் நடிக்க ஆசை" என கூறியுள்ளார். இவரின் இந்த ஆசை நிறைவேறுமா என்று தெரியவில்லை.
ஒரு சில ரசிகர்கள் நல்ல வேளை ரசிகன், விஷ்ணு மாதிரி ரொமான்ஸ் படமோனு நினைச்சிட்டோம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.