உலக மகா நடிப்புடா சாமி...! நைசா பிரபாஸுக்கு வலை விரிக்கும் விஜய் பட நடிகை....!
கேரளாவை பூர்வீகமாக கொண்ட மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருப்பார். பேட்ட படம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார்.
அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து வெற்றிப் படங்களையே கொடுத்த மாளவிகா மோகனன் அடுத்தடுத்த படவாய்ப்புகளை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாறன் படத்தில் நடித்து மொத்த மார்க்கெட்டையும் இழந்தார். இந்த படத்தில் எதிர்ம்றையான விமர்சனத்திற்கு ஆளானார். கன்னடா மற்றும் ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்தார்.
படவாய்ப்புகளை பெறுவதற்காக தனது கவர்ச்சிப்படங்களை இணையத்தில் உலாவிட்டார். அதன்பின்னர் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக கவர்ச்சி படங்களை வெளியிட்டு வந்தார். தளபதி விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படத்திலும் ஒரு சில காட்சியில் மட்டுமே வந்துசென்றதால் இவரது நடிப்பு பேசப்படவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் அம்மணி தொடர்ந்து ட்விட்டர், இன்ஸ்டா என்று வெரிச்சு வெரிச்சு பார்த்த வண்ணம் இருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று ட்விட்டர் பக்கத்தில் திடீரென்று “ நான் பாகுபாலி படத்தை 10-15 தடவை பார்த்துவிட்டேன்.என்ன ஒரு படம். பிரம்மாண்டமாக இருக்கிறது. பிரபாஸும் அற்புதமாக நடித்திருக்கிறார். மேலும் பிரபாஸுடன் நான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்று பதிவை பகிர்ந்துள்ளார். பாகுபாலி வந்து மூன்று வருடங்களையும் கடந்த நிலையில் அம்மணி என்னமோ படம் இன்னைக்கு தான் ரிலீஸ் ஆன மாதிரியான உணர்வில் பேசிக்கொண்டு இருக்கிறார். ஒருவேளை இதன்மூலம் பிரபாஸுடன் இணைந்து நடிக்க பட வாய்ப்பை பெறுவதற்காக இருக்குமோ என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.