
Cinema News
தமிழில் ரீ-எண்ட்ரி கொடுக்கும் அஜித் பட நடிகை.. இவங்க அந்த கால கவர்ச்சி கன்னி ஆச்சே.!!
சுந்தர்.சி இயக்கத்தில் தல அஜித் ஹீரோவாக நடித்த ‘உன்னைத்தேடி’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. சிவகுமார், விவேக், கரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் 1999ல் குடும்பக்கதையை மையமாகக்கொண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படத்தின் வெற்றியால் மாளவிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமைந்தது. இதையடுத்து அஜித்துடன் மீண்டும் ஆனந்த பூங்காற்றே படத்தில் நடித்தார். ஆனால், இப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார். அதன்பின் ரோஜா வனம், பூப்பறிக்க வருகிறோம், ஆகிய படங்களில் நடித்தார்.
இதையடுத்து தெலுங்கு, கன்னடா, மலையாளப்படங்களில் இவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைத்தது. 90 காலகட்டங்களில் கவர்ச்சி கன்னியாக வலம்வந்த இவருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பட வாய்ப்புகள் குறைந்தது.

malavika
பட வாய்ப்புகள் குறைந்ததையடுத்து முழுநேர கவர்ச்சி நடிகையாக மாறினார். கவர்ச்சி காட்டி இவர் நடித்த திருட்டு பயலே, நான் அவன் இல்லை போன்ற படங்கள் வசூலில் பட்டையை கிளப்பியது. ஒருகட்டத்தில் படவாய்ப்புகள் முற்றிலும் இழக்கவே திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் இறங்கினார்.
சுரேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர் வெளிநாட்டில் செட்டில் ஆனார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசையில் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக கவர்ச்சி படங்களை பதிவேற்றிவந்தார். இதன் விளைவாக தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
‘கோல்மால்’ என்ற அந்த புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாம் மாளவிகா. ஜாக்குவார் ஸ்டூடியோ தயாரிக்கும் இப்படத்தை பொன்குமாரவேல் இயக்குகிறார். ஜீவாவும், மிர்ச்சி சிவாவும் இதில் நாயகர்களாக நடிக்கிறார்கள். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.