என் போட்டோவ ஆபாசமா சித்தரிச்சிட்டாங்க.... கதறும் விஜய் பட நடிகை....!

by Rohini |
malavika_main
X

திரைபிரபலங்கள் அதிலும் குறிப்பாக ஹீரோயின்கள் தாங்கள் எங்கு சென்றாலும் விதவிதமாக புகைப்படங்கள் எடுத்து சோசியல் மீடியாவில் அப்டேட் செய்வதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளார்கள். அந்த வகையில் சமீபத்தில் மாலத்தீவு சென்ற நடிகை மாளவிகா மோகனன் தனது பிகினி புகைப்படங்களை அள்ளி தெளித்தார். இதனை கண்டு ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

malavika1

ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாளவிகா மோகனன் இரண்டாவது படத்திலேயே டாப் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மேலும் அந்த படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ்ஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்துள்ள மாளவிகா பாலிவுட்டில் யுத்ரா என்ற படத்திலும், தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ஹீரோ என்ற படத்திலும் நடித்துள்ளார். தொடர்ந்து பிசியாக வலம் வரும் மாளவிகா சமீபத்தில் தனது விடுமுறையை கழிக்க மாலத்தீவு சென்றிருந்தார்.

Malavika2

அங்கிருந்து அவர் பதிவு செய்த அனைத்து புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் அவரது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து, "இந்தப் புகைப்படத்தை ஒரு சிலர் ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

malavika

மேலும் ஒரு சில ஊடகங்களும் இதுபோன்ற புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இதுபோன்ற மலிவான பத்திரிகைகளில் ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்கள் வந்தால் புகார் அளிக்க உதவி செய்யவும்" என குறிப்பிட்டுள்ளார். இதனால் திரையுலகில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story