அடுத்தடுத்து செக் வைக்கும் மலையாள சினிமா! மொத்தமா ஆயிரம் கோடியா? வரலாற்றில் இல்லாத ஒரு சாதனை

Malayala Movies: இன்றைய சூழலில் தமிழ் ரசிகர்களை மொத்தமாக தன் பக்கம் இழுத்து இருக்கிறது மலையாள சினிமா. இந்த வருடம் மட்டும் பல நல்ல திரைப்படங்களை கொடுத்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் ஒரேடியாக இழுத்துப் போட்டி இருக்கிறது மலையாள படங்கள். இதுவரை இந்த ஆண்டில் பெரிய ஹீரோக்களின் தமிழ் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத நிலையில் அதை லாவகமாக பயன்படுத்திக் கொண்டது மலையாள சினிமா.

அதுவும் ஒரு நல்ல கதைக்களத்தோடு ஆழமான கருத்தை வெளிப்படுத்தும் படங்களை மக்களுக்கு கொடுத்ததன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களும் இப்போது மலையாள சினிமாவின் பக்கம் திரும்பி உள்ளனர். அந்த அளவுக்கு பெரும் தாக்கத்தை மலையாள படங்கள் தமிழ் ரசிகர்களிடையே ஏற்படுத்தியிருக்கின்றன.

இதையும் படிங்க: கோபியை நம்பி வந்தது தப்பா போச்சே… புலம்பி தள்ளும் ஈஸ்வரி… பாக்கியா பிசினஸுக்கு வந்த சோதனை…

இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சமீபத்திய ஒரு பேட்டியில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை கூறியிருக்கிறா.ர் இந்த வருடம் மட்டும் ரிலீஸ் ஆன ஆறு திரைப்படங்கள் மொத்தமாக சேர்ந்து ஆயிரம் கோடி வசூலை மலையாள சினிமாவிற்கு பெற்றுக் கொடுத்திருக்கிறதாம். 500, 600 கோடியை கூட நெருங்காத வகையில் இருந்த மலையாள சினிமா இன்று அந்த ஆறு படங்களின் வசூலையும் மொத்தமாக சேர்த்து பார்க்கும் பொழுது ஆயிரம் கோடி என சொல்லப்படுகிறது.

இதில் டிஜிட்டல் சாட்டிலைட் ரைட்ஸ் சேர்க்காமல் வெறும் பாக்ஸ் ஆபிஸில் மட்டும் மொத்தமாக இந்த படங்கள் ஆயிரம் கோடியை தொட்டு இருப்பதாக அவர் சொல்லி இருக்கிறார். அதுவும் ஐந்து மாதங்களில் இந்த வசூல் என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த நிலையில் இன்று டர்போ என்ற ஒரு படமும் ரிலீசாகி இருக்கிறதாம். அந்த படத்திற்கும் ஒரு பெரிய ஓப்பனிங் இருப்பதாக அவர் சொல்கிறார்.

இதையும் படிங்க: இந்த ரேஞ்சில காட்டினா நாங்க மொத்தமா காலி!.. தூக்கலா காட்டி தூக்கத்தை கெடுக்கும் அனுபமா!..

இதனால் மலையாள மார்க்கெட்டே பெரிய அளவில் உயர்ந்து இருக்கிறது என்றும் தனஞ்செயன் கூறினார். இந்தியன் சினிமாவிலேயே ஹிந்தி சினிமா மட்டும்தான் இந்த அளவு 2000, 3000 கோடி வசூல் என்று இருந்த நிலையை இன்று மலையாள சினிமா மாற்றி இருப்பதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் தென்னிந்திய சினிமாவிலேயே மலையாள சினிமா தான் இன்று நம்பர் ஒன் சினிமாவாக இருக்கிறது என்றும் கூறினார். சில பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அந்த திரைப்படங்கள் என்னவெனில் மஞ்ச மேல் பாய்ஸ் தி காட் லைஃப் ஆவேசம் பிரேமலோ பிரம்மயுகம் மலைக்கோட்டை வாலிபன் போன்ற படங்களாகும்.

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it