பாலியல் ரீதியா மட்டுமல்ல மலையாளத்தில் இந்த கொடுமையும் நடக்குது… லால் மீது பயங்கர புகார்

by Akhilan |
பாலியல் ரீதியா மட்டுமல்ல மலையாளத்தில் இந்த கொடுமையும் நடக்குது… லால் மீது பயங்கர புகார்
X

LAL

Lal: மலையாள திரையுலகில் தொடர்ச்சியாக பிரபல நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வெளியாகி வரும் நிலையில் இன்னொரு கொடுமை நடப்பதாக பிரபல மலையாள அசோசியேட்டான பெண் ஒருவர் தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

மலையாளத்தில் ஏற்பட்ட நடிகை மீதான தாக்குதலுக்கு பின்னர் நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி நடிகைகளிடம் விசாரணை மேற்கொண்டு ஒரு அறிக்கை தாக்கல் செய்து அரசிடம் ஒப்படைத்து விட்டது. பல வருடங்களாக அந்த அறிக்கை கிடப்பில் கிடக்கிறது.

இதையும் படிங்க: டேக் ஆப் ஆகும் வாடிவாசல்!.. லண்டன் பறக்கும் வெற்றிமாறன்!.. பரபர அப்டேட்!…

சமீபத்தில் இந்த அறிக்கையின் சில தகவல்கள் மட்டும் இணையத்தில் கசிந்தது. அதைத் தொடர்ந்து அம்மா என்னும் மலையாள நடிகர் சங்கம் மொத்தமாக ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து மலையாளத்தின் முன்னணி நடிகர்கள் மீது தொடர்ச்சியாக பல துணை மற்றும் பிரபல நடிகைகள் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மலையாள அசோசியேட் பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் மட்டுமல்ல மன ரீதியான கொடுமைகளையும் சினிமாவில் இருக்கும் பெண்களுக்கு நடந்து வருவதாக தெரிவித்து இருக்கிறார். நடிகர் மற்றும் இயக்குனரான லால் மீது எனக்கு மிகவும் பெரிய மரியாதை உண்டு.

அவர் நடிப்பில் உருவான ஒரு திரைப்படத்தில் பணிபுரிய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அங்கு லால் என்னிடம் நடந்து கொண்டது அதிர்ச்சியை அளித்தது. நான் என்ன சொன்னாலும் என்னை எரிந்துதான் விடுவார். அசிங்கப்படுத்துவது போல பேசிக் கொண்டிருப்பார். ஏன் சில சமயம் நான் டயலாக் கூறினால் அந்த பேப்பரை கிழித்து தூக்கி எறிந்து விடுவார்.

இதையும் படிங்க: அரண்மனை4ஐ தொடர்ந்து காஞ்சனா4… ஹீரோயின் யாரு தெரியுமா? சுவாரஸ்ய அப்டேட்

ஏற்கனவே மன உளைச்சலில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கு அது பெரிய சுமையாக இருந்தது. ஒருமுறை அவர் நின்று கொண்டிருக்க சேரில் உட்காரலாமே சார் எனக் கேட்டேன். வேற யாரும் சொன்னா போய் உட்கார்ந்து இருப்பேன். நீ சொன்னா கக்கூஸ்ல போய் உட்காரனும்னு தோணுது என்றாராம்.

அந்த யூனிட்டிலிருந்த அனைவருமே சிரித்து கலாட்டா செய்துள்ளனர். இதைக் கேட்டு மனம் உடைந்த அந்த அசோசியேட் ஒரு நாள் முழுவதும் அழுததாக குறிப்பிட்டிருக்கிறார். இதுவும் ஒரு டார்ச்சர்தான். இந்த பிரச்னையை யாரிடம் போய் சொல்ல முடியும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Next Story