மலையாள சினிமாவை சிதைத்த உச்ச நடிகர்... பிரித்விராஜுக்கே வாய்ப்பு கிடைக்காமல் செய்த சதி...
Malayalam: இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து நல்ல உச்சத்தில் இருந்த மலையாள சினிமாவிற்கு திருஷ்டி பட்டது போல தற்போது ஒரு பெரிய சிக்கலில் சிக்கி இருக்கிறது. இது தற்போது சினிமா ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்த நடிகர் திலீப் மஞ்சுவாரியரை விவாகரத்து செய்துவிட்டு காவ்யா மாதவன் உடன் மறுமணம் செய்து கொண்டார். அந்த நேரத்தில் நடிகை பாவனா திடீரென சிலரால் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த விஷயம் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.
இதையும் படிங்க: அப்போ பிக்பாஸ் இவர் தானா? புரோமோ ஷூட்டில் கசிந்த வீடியோ… பக்காவா இருக்காரே!..
அதைத் தொடர்ந்து நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி அந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட நடிகர் திலீப்பை மலையாள நடிகர் சங்கத்திலிருந்து விளக்க வேண்டும் என நடிகர் பிரிதிவிராஜ் கோரிக்கை வைத்திருந்தார். இதை தொடர்ந்து அவர் நீக்கப்பட்டார்.
ஆனால் நடிகர் தன்னுடைய பலத்தை பயன்படுத்தி சீனியர் மற்றும் ஜூனியர் நடிகர்களை தன் வசம் கொண்டு வந்த மலையாள சினிமாவை சமீப காலமாக ஆட்டிப்படைத்து வந்திருக்கிறார். அந்த வகையில் அவருடைய ஆதரவாளரால் மோகன்லால் தலைவரான பின் திலீப்பின் தகுதி நீக்கத்தையே ரத்து செய்ய வைத்தனர்.
இதையும் படிங்க: அஜித் மேல் இப்போ வரைக்கும் கோபம் இருக்கு! என்ன லைலா இப்படி சொல்லிட்டாங்க?
இதைத்தொடர்ந்து மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லை என வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து நீதிபதி ஹேமா தலைமையில் நடந்த விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கை பல வருடங்களாக முடக்கத்தில் இருந்த நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி நடிகைகள் பெரிய ஆபத்தில் தான் இருக்கின்றனர் என்ற முடிவை அடுத்து மொத்த மலையாள நடிகர் சங்கம் அம்மா நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர்.
இந்த அறிக்கையின் படி பிரச்சனைக்கு முக்கிய காரணமாக 15 பேர் இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதிலும் முதல் ஐந்து இடத்தில் இருப்பது மலையாளத்தின் முன்னணி நடிகர்கள் என்பது மேலும் அதிர்ச்சியான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இவர்களுக்கு எல்லாம் தலைவராக செயல்பட்டது நடிகர் திலீப் தான் எனவும், தனக்கு எதிராக பேசிய குஞ்சாக்கோ போபன், பிரித்விராஜ், பார்வதி, பாவனா உள்ளிட்டோருக்கு வாய்ப்புக் கிடைக்காம பார்த்துக்கிட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.