தமிழ் டைரக்டருக்கு நோ.. மலையாள டைரக்டரை லாக் செய்த யாஷ்.. படம் பேரு என்ன தெரியுமா?

by Akhilan |   ( Updated:2023-12-08 01:45:50  )
தமிழ் டைரக்டருக்கு நோ.. மலையாள டைரக்டரை லாக் செய்த யாஷ்.. படம் பேரு என்ன தெரியுமா?
X

Yash Movie: ஒரே படத்தில் இரண்டு பாகங்கள் சினிமா உலகின் முக்கிய ஃபேன் ஸ்டாராகி இருப்பவர் யாஷ். இவரின் அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பு பல நாட்களாக நிலவி வந்த நிலையில் தற்போது அதன் தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்திருந்த திரைப்படம் கேஜிஎஃப். இப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் ஆனது. முதல் பாகத்திலேயே ஹீரோவுக்கு அதிக அளவிலான பில்டப் வைக்க படத்துக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். கிட்டத்தட்ட பலரின் ஃபேவரிட் ஹீரோவானார் யாஷ்.

முதல் பாகத்தால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு உருவானது. எப்போ ரிலீஸ் ஆகும் என பலரும் யோசித்து கொண்டு இருக்க விஜயின் பீஸ்ட்டுடன் கேஜிஎஃப் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆனது. விஜயுடன் யாஷால் தாக்குப்பிடிக்க முடியுமா என்ற கேள்விகளும் எழுந்தது.

இதையும் படிங்க: வெள்ளித்திரையில் வெற்றிக்கண்ட பிக் பாஸ் ஹீரோக்கள்!.. எல்லாமே தரமான சக்சஸ் தானுங்க!..

அதனை தொடர்ந்து ஒரே வாரத்தில் பீஸ்ட்டை தூக்கி சாப்பிட்டு வெற்றிவாகை சூடியது என்னவோ கேஜிஎஃப் இரண்டாம் பாகம் தான். இதனால் மூன்றாம் பாகம் ரிலீஸ் எப்போ ஆகும் எனவும் ரசிகர்கள் அப்போதே கேள்வி எழுப்பினர். ஆனால் யாஷ் தன்னுடைய அடுத்த படம் என்னவென்ற அறிவிப்பையே வெளியிடாமல் இருந்தார்.

பிஎஸ் மித்ரன் தான் யாஷை அடுத்து இயக்கப்போகிறார் என்ற பேச்சுகள் இருந்தது. ஆனால் தற்போது யாஷை இயக்க போவது மலையாள முன்னணி டைரக்டரான கீது மோகன்தாஸ் தான் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்கு டாக்ஸிக் என்ற பெயரும் வைக்கப்பட்டு இருக்கிறது.

இப்படம் 2025ம் ஆண்டு ஏப்ரல் 10ல் ரிலீஸ் ஆகும் என்று இப்போதே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. யாஷின் கேஜிஎஃப் இரண்டாம் பாகம் இதே தமிழ் புத்தாண்டு ரிலீஸ் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. யாஷின் அடுத்த படத்துக்கு 3 வருட கேப் விட்டு இருக்கிறார். டாக்ஸிக் படமும் ஃபேன் இந்தியா ரிலீஸ் தான் என்பதால் ரசிகர்கள் இப்போதே எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கோலிவுட்டில் களமிறங்கும் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக்..! ஹீரோ இந்த நடிகர் தானாம்..!

Next Story