OTT: தமிழ் சினிமாவை போலவே தமிழ் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்தமானது மலையாள திரையுலகம். அப்படி மல்லுவுட்டில் போலீஸ் கதையில் வெளியான தரமான படங்களின் சூப்பர் லிஸ்ட். இன்னைக்கு லீவ்வை எஞ்சாய் பண்ணுங்க.
கூமன்
ஆசிஃப் அலி நடிப்பில் வெளியாகும் திரில்லர் படங்கள் எப்போதுமே ரசிகர்களுக்கு செம டைம்பாஸாக அமையும். திரிஷ்யம் என மாஸ் ஹிட் படத்துக்கு பெயர் போன ஜித்து ஜோசப் இயக்கத்தில் வெளியான இப்படம் அமேசான் பிரைமில் இருக்கிறது.
அன்வேஷிப்பின் கண்டேதும்
டார்வின் குரியகோஸ் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடித்துள்ளப் படம் ‘அன்வேஷிப்பின் கண்டேதும்’ . பார்ப்பதற்கு சாக்லேட் பாயாக இருந்தாலும் இதுபோன்ற இன்வெஸ்டிகேட்டிவ் படங்களில் டோவினோ தாமஸை அடிச்சிக்கவே முடியாது. அப்படி சூப்பர்ஹிட் அடித்த இப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் இருக்கிறது.
நயட்டு
சாதி பற்றிய படமில்லை. தேர்தல் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதியின் ஓட்டுக்காக ஒரு மூன்று அப்பாவி போலீஸ் அதிகாரிகள் மீது கொலை பழி சுமத்துகிறார்கள். இதை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை பெரிய அதிர்வலைகளை உருவாக்கியது. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இடம்பெற்றுள்ளது.

கண்ணூர் ஸ்குவாட்
மம்முட்டியின் அடுத்த பெஸ்ட் ஜானரில் இதுவும் ஒன்று. போலீஸாக அலட்டல் இல்லாமல் அவர் விசாரித்து குற்றவாளியை நெருங்குவதே திரில் தான். தமிழில் தீரன் போன்று துரத்தி செல்லும் ஸ்குவாட் கடைசியில் என்ன ஆனது என்பதுதான் கதை. ஜியோ ஹாட்ஸ்டாரில் இருக்கிறது.
ஆபிசர்
ஒரு மலையாளப் படம் இவ்வளோ பரபரப்பான திரைக்கதையோட இருக்குமா என சமீபத்தில் சொல்ல வைத்த படம் ஆபிசர் ஆன் டியூட்டி. குஞ்சக்க போபன் மற்றும் பிரியாமணி நடிப்பில் உருவான இப்படத்தின் முதல் காட்சியில் தூக்கில் தொங்கும் அந்த போலீஸ் ஆபிசர் தான் டைரக்டர் ஜித்து அஸ்ரஃப். அவரின் இந்த தைரியத்துக்கே படம் தாறுமாறு ஹிட்டாகி தற்போது நெட்பிளிக்ஸில் இருக்கிறது.
இரட்ட
சேட்டன்மார்களின் மற்றுமொரு அடிபொழி சம்பவம். கலங்கி கதற வைக்கும் யூகிக்க முடியாத தாறுமாறான கிளைமாக்ஸ். இரட்டை வேடத்தில் நடிப்பில் வித்தியாசம் காட்டி மிரள வைத்திருக்கும் ஜோஜு ஜார்ஜுக்காகவே பலமுறை பார்க்கலாம். நெட்பிளிக்ஸில் படம் அமைந்துள்ளது.
தலைவன்
இவரு இல்லாமல் போலீஸ் படமா பிஜூ மேனின் பல சூப்பர்ஹிட்டில் இதுவும் முக்கிய படம்தான். கூடவே ஆசிஃப் அலியும் நடிக்க படம் ஆரம்பத்தில் இருந்தே டாப் கியரில் இருக்கும். சோனி லைவ் ஓடிடியில் இடம்பெற்றுள்ளது.
ரேகா சரித்திரம்
ஆசிஃப் அலியின் ஹிட் லிஸ்ட்டில் சமீபத்திய இணைப்பு இப்படம். அனஸ்வரா ராஜன் நடிப்பில் படம் ஆச்சரிய திரைக்கதையாக அமைந்துள்ளது. இப்படமும் சோனி லைவ் ஓடிடியில் இடம்பெற்றுள்ளது.
கோலம்
டாப் நடிகர்கள் இல்லை என்றாலும் இதுபோன்ற படங்களை மாஸ் பண்ணுவோம் என சேட்டன்களின் அடுத்து ஒரு சம்பவம். முக்கிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அலுவலகக் கழிப்பறைக்குள் இறந்து கிடக்கிறார்.
முதலில் விபத்து என முடிவாக ஏஎஸ்பி இதை கொலை என விசாரித்து கண்டுபிடிக்கிறார். பிரபல மலையாள நடிகர்கள் கூட்டத்தில் படத்தின் கிளைமேக்ஸ் செம ட்விஸ்ட். இது அமேசான் பிரைம் ஓடிடியில் இருக்கிறது.