More
Categories: Cinema News Entertainment News latest news

மலையாளம் டூ தமிழ்… ரீமேக்கில் சாதித்த டாப் 5 படங்கள்… இதுவும் ரீமேக்கா?

சினிமா ஆர்வலர்கள் அதிகரிக்க துவங்கியதை அடுத்து ரீமேக்கின் வாசம் தற்போது அதிகமாகவே அடித்து வருகிறது. இருந்தும், இந்த பழக்கம் பல வருடங்களாக இருந்து தான் வருகிறது. இதில் டாப் ஹிட் அடித்த 5 ரீமேக் படங்கள் உங்களுக்காக…

முத்து:

Advertising
Advertising

முத்து திரைப்படம் 1995ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாகி 175 நாட்கள் ஓடியது. இத்திரைப்படத்தை கே. எஸ். ரவிக்குமார் இயக்கி இருந்தார். ரஜினிகாந்த், மீனா, ரகுவரன், சரத் பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தர். இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படம் மலையாளத்தில் வெளியான தேன்மாவின் கொம்பது படத்தின் ரீமேக்காகும். மலையாளத்தில் மோகன்லால் ரஜினி வேடத்தில் நடித்தார்.

பேரழகன்:

பேரழகன் 2004ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தினை சசி சங்கர் இயக்கி இருந்தார். சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இரட்டை வேடத்தில் நடித்திருந்தனர். செம ஹிட் அடித்த இப்படம் குஞ்சிகூனன் படத்தின் ரீமேக்காகும். மலையாளத்தில் திலீப், நவ்யா நாயர் இணைந்து நடித்திருந்தனர்.

ரீமேக்

ப்ரண்ட்ஸ்:

தமிழில் சித்திக் இயக்கத்தில் உருவான படம் ப்ரண்ட்ஸ். இப்படத்தில் விஜய், சூர்யா, தேவயானி இணைந்து நடித்தனர். வடிவேலு நேசமணியாக பட்டையை கிளப்பி இருப்பார். இப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட். மலையாளத்தில் வெளியான ப்ரெண்ட்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் இப்படம். தமிழ் மற்றும் மலையாளத்தில் சித்திக்கே இயக்கி இருந்தார். ஜெயராம், முகேஷ் மற்றும் ஸ்ரீனிவாசன் மலையாளத்தில் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: ரசிகர்களை கண்ணீர் விட வைத்த டாப் 5 படங்கள்… நீங்க மிஸ் பண்ணாம பாருங்க…

காசி:

தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் காசி. இப்படத்தில் கண் தெரியாதவர் வேடத்தில் விக்ரமின் நடிப்பு பலதரப்பிலும் பாராட்டுக்களை பெற்றது. வசந்தியும் லட்சுமியும் பின்னே நானும் என்ற மலையாள படத்தின் ரீமேக்காக இப்படம் உருவானது. இரு மொழிகளிலும் வினயன் இப்படத்தினை இயக்கினார். விக்ரம் வேடத்தில் கலாபவன் மணி நடித்திருந்தார். அதற்கு அவருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

ரீமேக்

குசேலன்:

ரஜினிகாந்த், பசுபதி மற்றும் மீனா நடிப்பில் வெளியான படம் குசேலன். 2008ல் வெளிவந்த குசேலன் திரைப்படத்தினை இயக்குனர் பி.வாசு இயக்கினார். ஜி. வி. பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைத்து இருந்தார். இத்திரைப்படம் மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற கதபறயும்போல் படத்தின் ரீமேக்காகும். தமிழில் ரஜினிகாந்த் நடித்த வேடத்தில் மலையாளத்தில் மம்முட்டி நடித்திருந்தார்.

Published by
Akhilan