நடிகர் விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் ஜனநாயகன் அவரின் கடைசி படமாக பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை காண உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். எனவே, கண்டிப்பாக இந்த படம் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 27ஆம் தேதி மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் உள்ள புக்கில் ஜலீல் என்கிற அரங்கில் நடைபெறவிருக்கிறது. இதற்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டன. பிளாக்கில் டிக்கெட் வாங்கியாவது இந்த நிகழ்ச்சியை பார்த்துவிட வேண்டுமென்று மலேசியாவில் உள்ள விஜய் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

5 மணி நேரத்திற்கு மேல் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முதலில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படங்களில் இடம்பெற்ற ஹிட் ஹிட் பாடல்களை பாடும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சி முடிந்ததும் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது. இந்த விழாவில் விஜயும் நேரில் கலந்து கொள்கிறார்.
இந்நிலையில் இந்த விழாவில் அரசியல் பேசக்கூடாது என மலேசியா போலீஸ் விஜய்க்கு கண்டிஷன் போட்டிருப்பதாக தற்போது செய்திகள் கசிந்திருக்கிறது. அவர்கள் சொல்லாவிட்டாலும் இந்த விழாவில் விஜய் அரசியல் பேச வாய்ப்பில்லை. ஏனெனில் அது ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மட்டுமே.. ஆனாலும் போலீசார் அந்த கட்டுப்பாட்டை விதித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
